தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

தில்லி வந்தார் ஜப்பான் பிரதமர் அபே; இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்கு வரவேற்பு

தில்லியில் நடைபெறும் ஒன்பதாவது இந்தியா-ஜப்பான் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மூன்று நாள் பயணமாக ஜப்பான் பிரதமர் சின்சோ அபே இந்தியா வந்தடைந்தார்.

News image
Updated On :11 டிசம்பர் 2015, 2:56 pm

தில்லியில் நடைபெறும் ஒன்பதாவது இந்தியா-ஜப்பான் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மூன்று நாள் பயணமாக ஜப்பான் பிரதமர் சின்சோ அபே இந்தியா வந்தடைந்தார்.

தில்லியில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சந்தித்த அபே, இந்தியா- பாகிஸ்தான் இடையே மீண்டும் நடைபெறவிருக்கும் பேச்சுவார்த்தையை வரவேற்பதாக கூறினார்.

நாளை நடக்கவிருக்கும் இந்தோ-ஜப்பான் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியுடன் சின்சோ அபே பல திட்டங்கள் குறித்து விவாதிக்க இருக்கிறார்.

அணுசக்தி ஒப்பந்தம், முதல் புல்லட் ரெயில் திட்டத்தில் ஜப்பானின் உதவி, இருநாட்டு உறவுகளை மேம்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், இந்தியா-ஜப்பான் இடையேயான முதலீடு மற்றும் வர்த்தகம் குறித்து விவாதிக்கப்படுகிறது.

மத்திய நிதித்துறை இணை அமைச்சர் ஜயந்த் சின்ஹா டெல்லி விமான நிலையத்திற்கு நேரில் சென்று ஜப்பான் பிரதமர் மற்றும் அவருடன் வந்துள்ள உயர்மட்ட குழுவினரை வரவேற்றார்.

பின்னர் தில்லி வந்துள்ள அபேவை வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சந்தித்து பேசினார்.

இந்தியா- பாகிஸ்தான் இடையே தொடரவிருக்கும் பேச்சுவார்த்தை ஆசிய பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள இறுக்கத்தை குறைக்கும் என அபே கூறியதாக, சுஷ்மா தெரிவித்தார்.

இந்திய ஜப்பான் பிரதமர்கள் இதற்கு முன்பு சந்தித்த போது எடுக்கப்பட்ட முடிவுகளின் தற்போதைய நிலை குறித்து சுஷ்மா, ஜப்பான் பிரதமர் அபேயிடம் விளக்கி கூறினார்.

மேலும், இந்தியாவில் நடைபெற்ற இந்தியா-ஆப்பிரிக்கா மாநாடு குறித்தும், ஆப்பிரிக்க நாடுகள் இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு ஒத்துழைக்க முன் வந்துள்ளது குறித்தும் சுஷ்மா விளக்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.