ஸ்ரீவில்லிபுத்தூரில் இளம் பெண் வெட்டிக் கொலை
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்ட கணவர், அவரை வெட்டிக் கொலை செய்தார்.


விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்ட கணவர், அவரை வெட்டிக் கொலை செய்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர், அய்யம்பட்டி சிமெண்ட் தெருவைச் சேர்ந்தவர் ஆனந்த் (35). சொந்தமாக ஆட்டோ வைத்து தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி வித்யா (24). இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உண்டு. வித்யா திருமணத்திற்கு முன்னர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதனை மறைத்து ஆனந்திற்கு திருமணம் செய்து வைத்தார்களாம். தொடர்ந்து ஆனந்த் மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு அவருடன் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே பிரச்னை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் திங்கள்கிழமை இரவு வீட்டில் இருந்த வித்யாவை, ஆனந்த் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீஸார் ஆனந்த் மீது வழக்குப் பதிவு செய்து, வித்யாவின் சடலத்தைக் கைப்பற்றி ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...