தெருவிளக்குகளில் கட்டப்பட்டுள்ள விளம்பர பதாகைகளை அகற்ற கோரிக்கை
பழனியில் தைப்பூசத் திருவிழாவின் போது நகராட்சி தெருவிளக்குகள் உள்ள கம்பங்களிலும், மின்சார வாரியத்தின் மின் கம்பங்களிலும் விளம்பர உரிமம் பெறும் சில நிறுவனங்கள் விழிப்புணர்வு பதாகைகள்


பழனி நகரங்களில் தெருவிளக்குகளில் கட்டப்பட்டுள்ள விளம்பர பதாகைகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பழனியில் தைப்பூசத் திருவிழாவின் போது நகராட்சி தெருவிளக்குகள் உள்ள கம்பங்களிலும், மின்சார வாரியத்தின் மின் கம்பங்களிலும் விளம்பர உரிமம் பெறும் சில நிறுவனங்கள் விழிப்புணர்வு பதாகைகள் என்ற பெயரில் விழிப்புணர்வு வாசகங்களை சிறிதாகவும், விளம்பரங்களை பெரிதாகவும் வைப்பது வழக்கம். இதுபோன்ற விளம்பர பதாகைகள் பழனி நகரம் மட்டுமன்றி அடிவாரம் செல்லும் வழி, சன்னதி வீதி, கிரிவீதிகளில் ஏராளமாக வைக்கப்பட்டுள்ளது. திருவிழாக்காலம் முடிந்து விட்ட நிலையிலும் இந்த பதாகைகள் இன்றுவரை அகற்றப்படவில்லை. இதனால் மின்கம்பங்களில் பழுது ஏற்படும் போது அதை சரிசெய்ய வரும் அலுவலர்களால் மேலே ஏறி வேலை செய்ய சிரமம் ஏற்பட்டுள்ளது. தவிர, இவற்றால் ஏற்படும் கவனஈர்ப்பு விபத்துக்கும் வழிவகை செய்வதாக உள்ளது. ஆகவே, மேற்படி விளம்பர பதாகைகளை நகராட்சி நிர்வாகம், மின்வாரியம் இணைந்து உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...