மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

அரசு பேருந்தை வழிமறித்து ஓட்டுநருக்கு மிரட்டல்: மூவர் மீது வழக்கு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரசு போக்குவரத்துக்கழகப் பேருந்தை வழிமறித்து, ஓட்டுநரை அரசுப் பணி செய்ய விடாமல் தடுத்த மூவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவர்களைத் தேடி வருகிறார்கள்.

News image
Updated On :10 ஜூலை 2015, 1:37 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரசு போக்குவரத்துக்கழகப் பேருந்தை வழிமறித்து, ஓட்டுநரை அரசுப் பணி செய்ய விடாமல் தடுத்த மூவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவர்களைத் தேடி வருகிறார்கள்.

பேரையூர், வண்டரி, அணைக்கரப்பட்டியைச் சேர்ந்தவர் மருதன் மகன் வரதராஜ் (55). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனையில் ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். வியாழக்கிழமை இரவு 9 மணி அளவில் ஸ்ரீவில்லிபுத்தூர்-நெடுங்குளம் நகரப் பேருந்தை ஓட்டிச் சென்று கொண்டிருந்தார்.

நெடுங்குளம்-ராமகிருஷ்ணா காலனி அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது, இரு சக்கர வாகனத்தில் வந்த மூவர் பைக்கை குறுக்கே பேருந்தை வழிமறித்து நிறுத்தியுள்ளார்கள். பின்னர் ஓட்டுநரை, பேருந்து ஓட்டவிடாமல் தடுத்து, ஆபாசாமாகப் பேசி, அரசு வேலை செய்யவிடாமல் தடுத்து மிரட்டிச் சென்றுள்ளார்கள்.

இது குறித்து கூமாப்பட்டி காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை ஓட்டுநர் வரதராஜ் புகார் செய்தார். போலீஸார் நெடுங்குளத்தைச் சேர்ந்த ராஜ் மகன் சதீஷ்குமார், பால்மாணிக்கம் மகன் முத்துக்குமார், வீரன் மகன் பாலமுருகன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களைத் தேடி வருகிறார்கள்.
இளம் பெண் மானபங்கம்: ஒருவர் கைது

நெடுங்குளம், ராமகிருஷ்ணா காலனி பேருந்து நிறுத்தம் அருகே வியாழக்கிழமை இரவு தங்கமுனியாண்டி மனைவி செல்வராணி (25) என்பவர் நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த மூவர், செல்வராணியை முதுகில் அடித்து அவரது நைட்டியைப் பிடித்து இழுத்து, ஆபாசமாகப் பேசியுள்ளார்கள். அவர் சத்தம்போட்டு கணவரை அழைத்துள்ளார்.

அதற்குள் இவர்கள் தப்பி ஓடிவிட்டார்கள். பின்னால் வந்த டிராக்டரில் வந்த கோவிந்தன் மகன் முருகன் என்பவர் தங்கமுனியாண்டியை ஆபாசமாகப் பேசி, சட்டையைப் பிடித்து இழுத்து கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இது குறித்து செல்வராணி, கூமாப்பட்டி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் நெடுங்குளத்தைச் சேர்ந்த வீரன் மகன் பாலமுருகன், பால்மாணிக்கம் மகன் முத்துக்குமார், ராஜ் மகன் சதீஷ்குமார், கோவிந்தன் மகன் முருகன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து முருகனைக் கைது செய்தனர். ஏனையோரைத் தேடி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.