மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கலசலிங்கம் பேராசிரியருக்கு இளம் ஆராய்ச்சியாளர் விருது

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழக பேராசிரியர் லட்சமிநாராயணனுக்கு இளம் ஆராய்ச்சியாளர் விருது கிடைத்துள்ளது.

News image
Updated On :13 ஜூலை 2015, 12:13 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழக பேராசிரியர் லட்சமிநாராயணனுக்கு இளம் ஆராய்ச்சியாளர் விருது கிடைத்துள்ளது.

கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் உள்ள சர்வதேச ஆராய்ச்சி மையத்தில் பேராசிரியர் பி.லட்சுமி நாராயணன் நானோ சென்ஸார் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார். இவரது உயரியில் உணர்வி என்ற தலைப்பிலான ஆராய்ச்சியை சென்னையில் உள்ள வீனஸ் இண்டர் நேஷனல் பவுண்டேஷனுக்கு அனுப்பியிருந்தார். வரப்பெற்ற 600 ஆராய்ச்சி கட்டுரைகளில் லட்சுமி நாராயணின் கட்டுரை தேர்வு பெற்று, கருத்தரங்கில் உரையாற்ற இவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

இவர், பயோ சென்ஸார் துறையில் ஆராய்ச்சியில் ஈடுபட்டு, நோய் கிருமிகளைக் கண்டுபிடிக்கப் பயன்படும் கருவியை வடிவமைத்ததற்காக இவருக்கு இளம் ஆராய்ச்சியாளர் விருது மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. விருதினை சென்னை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் கலாநிதி வழங்கினார்.

பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை விருது பெற்று திரும்பிய பேராசிரியரை வேந்தர் க.ஸ்ரீதரன், துணை வேந்தர் ச.சரவணசங்கர், பதிவாளர் வெ.வாசுதேவன், துறைத் தலைவர் மனோகரன், வேந்தரின் தனிச் செயலாளர் பேராசிரியர் முரளிகிருஷ்ணன் ஆகியோர் பாராட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.