மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இரு சமுதாயத்தினரிடையே மோதல்: பதற்றம்: ஏராளமானோர் மீது வழக்கு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் வியாழக்கிழமை அதிகாலை மோதிக்கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டது. பதற்றம் ஏற்பட்டதையடுத்து மாவட்ட காவல்

News image
Updated On :16 ஜூலை 2015, 12:21 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் வியாழக்கிழமை அதிகாலை மோதிக்கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டது. பதற்றம் ஏற்பட்டதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் அங்கு ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள பாட்டக்குளத்தி்ல் குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும், இக் கிராமத்தை ஒட்டியுள்ள திருமலாபுரத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினரும் குடியிருந்து வருகிறார்கள். இப் பகுதியில் இருந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஏராளமானோர் காலை மற்றும் மாலையில் தனியார் பேருந்துகளில் பயணித்து வருகிறார்கள். காலையில் பாட்டக்குளத்தில் குறிப்பிட்ட சமுதாயத்தினர் ஏறி அமர்ந்து கொள்வதால், திருமலாபுரத்தைச் சேர்ந்தவர்கள் அமர இடம் கிடைக்காது. மாலையில் ஊர் திரும்பும் போதும் போட்டிகள் ஏற்பட்டுள்ளது. மேலும் இரு தரப்பு மாணவிகளையும் பேருந்துகளில் மற்ற சமுதாயத்தினர் கிண்டல் செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில் திருமலாபுரத்தைச் சேர்ந்த முத்துராஜ், சின்னராஜ் ஆகியோர், பாட்டக்குளத்தைச் சேர்ந்த ப.பிரகாஷ், ரா.விக்னேஷ், ஜெ.சந்துரு, க.முத்துக்கிருஷ்ணன், செ.அஜித்குமார், ரா.மனோஜ், ஜெ.துர்க்கையாண்டி ஆகியோரிடம் புதன்கிழமை ஏன், எங்கள் தரப்பு மாணவிகளை கேலி செய்கிறீர்கள் என்று கேட்டுள்ளனர். இதில் ஆத்திரமுற்ற இவர்கள், முத்துராஜையும், சின்னராஜையும் அடித்து சட்டையைக் கிழித்து சாதியைக் கூறி இழிவாகப் பேசியுள்ளார்கள். இது குறித்து திருமலாபுரம் ஊர்நாட்டாமை ஆ.செல்வராஜ் (47) கிருஷ்ணன்கோவில் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் பிரகாஷ் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

ஆயுதங்களுடன் திரண்டனர்:

திருமலாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே பாட்டக்குளத்தைச் சேர்ந்த சங்கிலிபாண்டி, வீரகுமார், கோவிந்தத்தேவர், செல்வம், ஜெயக்குமார் மற்றும் பெயர் தெரியாத 18 பேர் மற்றும் அடையாளம் தெரியாத நூற்றுக்கும் மேற்பட்டோர் சட்ட விரோதமாக வியாழக்கிழமை அதிகாலை பயங்கர ஆயுதங்களுடன் கூடி கலவரம் செய்ய முயன்றுள்ளார்கள். இது குறித்து திருமலாபுரம் ஊர் நாட்டாமை ஆ.செல்வராஜ், கிருஷ்ணன்கோவில் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

எஸ்.எஸ்.எஸ்.ஐ. புகார்:

திருமலாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே, ஊர் நாட்டாமை ஆ.செல்வராஜ், முத்தையா மகன் முத்துச்சாமி, முத்துராஜ், சின்னராஜ், தமிழ்செல்வன், டேவிட்ராஜ் மற்றும் பலர் ஒன்று கூடி, சட்ட விரோதமாக போவோர், வருவோருக்கு இடையூராக வழிமறித்து அனுமதியின்றி கலவரத்தில் ஈடுபட முயன்றுள்ளார்கள். இது குறித்து சிறப்பு சார்பு ஆய்வாளர் ராமமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

மேலும் இரு வழக்கு: இந்த கலவரம் தொடர்பாக சிறப்பு சார்பு ஆய்வாளர் வேலாயுதம் கொடுத்த புகாரின் பேரில் பெயர் தெரிந்த 17 பேர் மற்றும் 25 பேர் மீதும், சிறப்பு சார்பு ஆய்வாளர் மோகன்குமார் கொடுத்த புகாரின் பேரில் திருமலாபுரம் ஊர் நாட்டாமை ஆ.செல்வராஜ் மற்றும் 6 பேர் உள்ளிட்ட 25 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

கலவரம் தொடர்பான தகவல் கிடைத்ததும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன், ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் கே.முரளிதரன் ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டு நிலமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.