விருதுநகரில் வணிக வளாக உரிமையாளரை குடிபோதையில் கல்லால் தாக்கி காயப்படுத்தியவரை போலீஸார் கைது செய்தனர்.
விருதுநகர் புதுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் மகன் மணிகண்டன்(28). இப்பகுதியில் இவருக்கு சொந்தமான வணிக வளாகம் உள்ளது. அதில், அம்பேத்கார் நகரைச் சேர்ந்த அல்போன்ஸ்(32) என்பவர் வணிக வளாகப் பகுதியில் அமர்ந்து மதுக் குடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தாராம். இதை உரிமையாளர் மணிகண்டன் பலமுறை தட்டிக் கேட்டாராம். அதேபோல், வெள்ளிக்கிழமை இரவிலும் வணிக வளாகப் பகுதியில் மது அருந்திக் கொண்டிருந்ததை பார்த்து தட்டிக் கேட்டதால், ஆத்திரம் அடைந்த நிலையில் அல்போன்ஸ் கல்லால் தாக்கி மணிகண்டனை காயப்படுத்தினாராம்.
இது தொடர்பாக விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்தில் அவர் புகார் செய்தார். அதன் அடிப்படையில் அல்போன்ஸ் மீது வழக்கு பதிந்து போலீஸார் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதுபாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்த பெண் கைது

தோ்தல் பிரசார சீா்திருத்தம் கோரும் சுயேச்சைகள்!

தொகுதி நிலவரம் - வேப்பனஅள்ளி! அதிமுக, திமுக வெற்றியை தீா்மானிக்கும் தவெக, நாதக!

பரமத்தி வேலூா் தொகுதி! மீண்டும் நேரடி போட்டியில் திமுக-அதிமுக!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

