மது ஆலைகளுக்கு உரிமங்களை வழங்கியவர் கருணாநிதி:ராமதாஸ்
தமிழகத்தில் திமுக ஆட்சியில் மது ஆலைகளுக்கு உரிமங்களை வழங்கியவர் கருணாநிதிதான் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் புதன்கிழமை தெரிவித்தார்.


தமிழகத்தில் திமுக ஆட்சியில் மது ஆலைகளுக்கு உரிமங்களை வழங்கியவர் கருணாநிதிதான் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் புதன்கிழமை தெரிவித்தார். தைலாபுரம் தோட்டத்தில் உள்ள அரசியல் பயிலரங்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியது,
1937 ஆண்டு ராஜாஜி முதல்வராக இருந்த போது சேலம் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் பூரண முழு மதுவிலக்கை கொண்டு வந்தார்.1948க்கு பிறகு ஓமந்தூர் பி.ராமசாமி ரெட்டியார் பூரண மதுவிலக்கை தமிழ்நாட்டில் கொண்டு வந்தார்.23 ஆண்டுகள் பூரண மதுவிலக்கு தமிழகத்தில் இருந்தது.அதன் பிறகு 1971ல் மதுவிலக்கை அகற்றிவிட்டு மதுவை அறிமுகம் செய்கிறார் கருணாநிதி.அதன் விளைவு 2 தலைமுறைகளையும் பாதித்து 3ம் தலைமுறையும் பாதிக்கின்ற வகையில் தற்போது 4 வயது குழந்தைக்கு மதுவை ஊற்றி கொடுக்கும் கலச்சாரம் பரவியிருக்கின்றது காரணமானார் கருணாநிதி தான்.
பேரிஞர் அண்ணாவிடம் மதுவினால் வருமானம் வருமே என்று பத்திரிக்கையாளர்கள் கேட்ட போது பெரு நோயாளின் கையில் இருந்து வருகின்ற வெண்ணையை போன்றது இதில் வருகின்ற வருமானம் என்றார்.
அண்ணாவின் வழியில் நடக்கின்றதாக சொல்லுகின்ற கருணாநிதி அவருக்கும் அவரது கொள்ளைக்கும் துரோகம் செய்து மதுவை திறந்து விட்டார்.இப்போது 44 ஆண்டுகளுக்கு பிறகு ஞானோதயம் ஏற்ப்பட்டு தற்போது வரும் 8 மாதத்தில் தேர்தல் வருவதை கவனத்தில் எடுத்துக்கொண்டு தமிழகத்தில் இருக்கின்ற கட்சிகள்,மக்கள் நலம் விரும்பிகள்,மதுவை எதிர்க்கின்ற சூழ்நிலையில் நானும் மதுவை எதிர்க்கின்றேன் என்ற எண்ணத்தில் அதுவும் முழு மனதோடு இல்லாமால் திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை கொண்டு வருவேன் என்று அரசியல் ஆதாயத்திற்காக சொல்கிறார்.
மக்களுடைய சமூக நலன் கருதி 35 ஆண்டு காலமாக நான் மது ஓழிப்பிற்காக போராடி வருகிறேன்.பாமக துவங்குவதற்கு முன்னால் இருந்து இந்த கொள்கைகாக நான் போராடி வருகிறேன்.இதில் இருந்து பாமகவுடைய சமூக நலனும் திமுகவுடைய வாக்கு வங்கி அரசியலின் வேறுபாடும் தெரிகிறது.எங்களுக்கும் வாக்கு வங்கி இருக்கிறது.ஆனால் மக்கள் நலன் தான் அதைவிட முக்கியம்.ஆனால் அவருக்கு மக்கள் மீது நலன் இருந்தால் அவரது ஆட்சி காலத்திலேயே இந்த தவறை உணர்ந்து மதுவிலக்கை அமல் படுத்தி இருப்பார்.
கடந்த 2008ம் ஆண்டு டிசம்பர் மாதம் 22ம் தேதி எனது தலைமையில் 44 சமுதாய தலைவர்கள் மற்றும் மத குருமார்களை அழைத்துக்கொண்டு போய் கோட்டையிலே அப்போது முதல்வராக இருந்த கருணாநிதியை சந்தித்தேன்.அப்போது நான் பொதுமக்கள் மதுவால் சிதைவது பற்றியும் இளைஞர்கள் பாழாவது பற்றியும் ஓரு வழக்குறைஞர் நீதிமன்றத்தில் எடுத்துரைப்பது போல் பேசினேன்.கடைசியில் கருணாநிதி சொன்னது மருத்துவரின் கொள்கை நான் எனது கொள்கை என்றார்.நான் இதை படிப்படியாக அமுல் படுத்துவதாக கூறி மது விற்பனை நேரத்தை ஒரு நேரம் குறைத்தார்.
ஆனால் இன்றைக்கு அவரும் அவருடைய கட்சி பொருளரும் மதுவை ஒழிப்பை பற்றி ஏதேதோ பேசுகிறார்கள்.பாரதி பாடினான் ஆலைகள் செய்வோம்,பள்ளி சாலைகள் செய்வோம் என்று.ஆனால் இவர்களது ஆட்சி காலத்தில் இரண்டு சாராய ஆலைகள் துவங்குவதற்கு அனுமதி அளித்தார்.கலைஞர் கதை வசனம் எழுதிய உலியின் ஓசை படத்தை எடுத்தவருக்கு ஒரு ஆலை.கலைஞர் தொலைக்காட்சி தொடங்குவதற்கு உதவிய ஒருவருக்கு இன்னொரு ஆலை.இப்படி மது ஆலைகளுக்கு உரிமங்களை வழங்கியவர் கலைஞர் தான்.
மூன்றாவது தலைமுறை சமுதாயம் பாழ்பட்டு கிடக்கிறது.நபிகள் நாயகம் தனது போதனையில் கூறும் போது சபிக்கப்பட்டவர்கள் யார் என்பதை பற்றி மதுவை தயாரிப்பவர்,மதுவை தயாரிக்க கூறுபவர்,மது அருந்த தருபவர்,மது அருந்த தருபவர்,மதுவை எடுத்துக்கொண்டு போகிறவர்,மதுவை எடுத்து செல்ல கூறுபவர்,மதுவை விற்பவர்,மதுவை வாங்கி செல்பவர்,மதுவை அன்பளிப்பாக தருபவர்,மது விற்ற பணத்தில் உணவு உண்பவர் ஆகிய 10 பேரும் சமிக்கப்பட்டவர்கள் தான் கூறுகிறார்.
இவற்றில் பெரும்பாலான பாவங்களை செய்து சபிக்கப்பட்டவர் தான் கலைஞர்.அது மட்டும் இன்றி தமிழக மக்களுக்கு மதுவை கொடுத்து அவர்களில் பல பேரை சபிக்கப்பட்டவர்களாக மாற்றியவரும் கலைஞர் தான்.அதனாலே இவ்வளவு பாவங்களை செய்த கலைஞர் தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்ட வேண்டும்.அதன் பிறகு வேண்டுமெனால் மதுவிலக்கு பற்றி பேசட்டும்.
அதிமுக மதுவிலக்கை கொண்டு வருவதில் சாத்தியமில்லை.அவர்களுடைய கவனம் தற்போது டெல்லி உச்சநீதிமன்றம் நோக்கி தான் உள்ளது.
பாமகவின் தமிழக முதலமைச்சர் வேட்பாளர் ஒவ்வொரு மாவட்டத்தில் பெண்களை கொண்டு மது ஒழிப்பு போராட்டம் நடத்தி வருகிறார்.கடைசியாக தூத்துகுடி மாவட்டம் கோயில்பட்டில் நடத்தினார்.அடுத்த மாதம் நெல்லையில் வள்ளியூரில் 5 ஆயிரம் பெண்களை கொண்டு நடத்த போகிறார்.மது ஒழிப்பு குறித்து தொடர்ந்து போராட்டம் பாமக சார்பில் நடைபெறும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...