மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

விருதுநகர் அருகே பைக் மோதியதில் மூதாட்டி சாவு

விருதுநகர் அருகே சாலையை கடந்து சென்ற மூதாட்டி மீது இருசக்கர வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Updated On :24 ஜூலை 2015, 2:38 pm

விருதுநகர் அருகே சாலையை கடந்து சென்ற மூதாட்டி மீது இருசக்கர வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
   
விருதுநகர் அருகே சேர்வைக்காரன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மருதன் என்பவரின் மனைவி ராமாயி(75). இவர் வியாழக்கிழமை சாலையை கடநது தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தாராம். அப்போது, மத்தியசேனையில் இருந்து வடமலாபுரம் நோக்கி வேகமாக சென்ற இருசக்கர வாகனம் மோதியது. இதில், பலத்த காயம் அடைந்த மூதாட்டியை உயிருக்கு ஆபத்தான நிலையில் சிவகாசி அரசு
மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
   
இது தொடர்பாக அவரது மகன் வீரணன் ஆமத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் வடமலாபுரம் அண்ணாகாலனியைச் சேர்ந்த மாரீஸ்வரன்(25) என்பவரை கைது செய்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.