தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

திருநெல்வேலி கருப்பாநதி அணை நிரம்பியது: உபரி நீர் ஆற்றில் திறப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் பருவ மழைக்கு முதலாவதாக 72 அடி கொள்ளளவு கொண்ட கருப்பாநதி அணை வெள்ளிக்கிழமை நிரம்பியது. இதையடுத்து அணைக்கு வந்து கொண்டிருந்த 134 கனஅடி உபரி நீர் ஆற்றில் திறக்கப்பட்டது.

News image
Updated On :6 நவம்பர் 2015, 3:52 pm

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி மாவட்டத்தில் பருவ மழைக்கு முதலாவதாக 72 அடி கொள்ளளவு கொண்ட கருப்பாநதி அணை வெள்ளிக்கிழமை நிரம்பியது. இதையடுத்து அணைக்கு வந்து கொண்டிருந்த 134 கனஅடி உபரி நீர் ஆற்றில் திறக்கப்பட்டது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வந்த தொடர் மழையால் அணைகளின் நீர்வரத்து கணிசமாக அதிகரித்து நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வந்தது. இதனிடையே 72 அடி கொள்ளளவு கொண்ட கருப்பாநதி அணை வெள்ளிக்கிழமை (நவ. 6) முழுக் கொள்ளளவை எட்டியது.

நிகழாண்டில் வடகிழக்குப் பருவ மழை தொடங்கி பெய்து வரும் நிலையில்  திருநெல்வேலி மாவட்டத்தில் முதலாவதாக கருப்பாநதி அணை நிரம்பியது. அணை நிரம்பியதை அடுத்து அணைக்கு வந்து கொண்டிருந்த 134 கனஅடி உபரிநீர் ஆற்றில் திறந்து விடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.