இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

அணைகளுக்கு நீர்வரத்து குறைந்தது: சேர்வலாறு அணை நீர்மட்டம் 119 அடியாக உயர்வு

மேற்குத் தொடர்ச்சி மலையில் மழை குறைந்ததால் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்து காணப்படுகிறது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் திங்கள்கிழமை 119 அடியாக இருந்தது.

News image
Updated On :16 நவம்பர் 2015, 7:43 am

ஷேக் அப்துல்காதர்

மேற்குத் தொடர்ச்சி மலையில் மழை குறைந்ததால் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்து காணப்படுகிறது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் திங்கள்கிழமை 119 அடியாக இருந்தது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த பலத்த மழையால் திருநெல்வேலி மாவட்டத்தில் கருப்பாநதி, குண்டாறு, கடனாநதி, ராமநதி ஆகிய 4 அணைகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது.
பிரதான அணைகளான பாபநாசம் அணையின் நீர்மட்டம் 27 அடியும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 24 அடியும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 14 அடியும் உயர்ந்துள்ளது.

திங்கள்கிழமை நிலவரப்படி 153 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 118.63 அடியாகவும், 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 103.20 அடியாகவும், 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 76.75 அடியாகவும் இருந்தது. கடனாநதி, ராமநதி அணைகளின் நீர்மட்டம் தலா 13 அடி உயர்ந்து நிரம்பியுள்ளன.

கடந்த 10 தினங்களில் பாபநாசம் அணையில் 319 மி.மீ மழையும், சேர்வலாறு அணையில் 182 மி.மீ மழையும், கடனாநதி அணையில் 170 மி.மீ மழையும், ராமநதி அணையில் 154 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது. மணிமுத்தாறு அணையில் 225.2 மி.மீ மழை பெய்த போதிலும் எதிர்பார்த்தவாறு நீர்மட்டம் உயரவில்லை.

பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 928.03 கனஅடியும், மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 311 கனஅடியும், கடனாநதி அணைக்கு விநாடிக்கு 54 கனஅடியும், ராமநதி அணைக்கு விநாடிக்கு 50.55 கனஅடியும், அடவிநயினார் அணைக்கு விநாடிக்கு 47 கனஅடியும், வடக்குப் பச்சையாறு அணைக்கு விநாடிக்கு 68 கனஅடியும், நம்பியாறு அணைக்கு விநாடிக்கு 98 கனஅடியும், கொடுமுடியாறு அணைக்கு விநாடிக்கு 20.49 கனஅடியும் நீர்வரத்து இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.