எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

மணப்பாறையில் நடவு எந்திரம் மூலம் சம்பா நெல் நாற்று நடும் பணி தொடக்கம்

மணப்பாறையில் சீகம்பட்டி கிராமத்தில் வயலில் நடவு எந்திரம் மூலம் சம்பா நெல் நாற்று நடும் பணி துவங்கியது.

News image
Updated On :20 நவம்பர் 2015, 12:16 pm

கோபாலகிருஷ்ணன்

மணப்பாறையில் சீகம்பட்டி கிராமத்தில் வயலில் நடவு எந்திரம் மூலம் சம்பா நெல் நாற்று நடும் பணி துவங்கியது.

மணப்பாறை அருகே உள்ள சீகம்பட்டி கிராமத்தில் வயலில் நடவு எந்திரம் மூலம் சம்பா நெல் நாற்று நடும் பணியை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சேட்முகமது தொடங்கி வைத்து  பேசும்போது மணப்பாறை வட்டாரத்தில் இந்த ஆண்டு எந்திர முறையில் 600 எக்கரில் நாற்று நடவு பணி நடைபெறவுள்ளது, மேலும் இதற்கு மானியமாக எக்கர் ஒன்றுக்கு ரூ.ஆயிரத்து இருநூறு வழங்கப்படும்.

சம்பா நடவு செய்யும் விவசாயிகள் இதனைப்பயன்படுத்தி எந்திர முறையில் நடவும். இம்முறையில் நடவு செய்வதால் சிம்புகள் அதிகம் உண்டாகி மகசூல் அதிகரிக்கின்றது. மேலும் ஒரே சீரான இடைவெளியில் நடவு செய்வதால் பயிருக்குத்தேவையான உரசத்துக்கள் சூரிய வெளிச்சம், காற்றோட்டம்  முழுமையாக கிடைக்கின்றது. எலியினால் ஏற்படும் பயிர்ச்சேதம் தவிர்ககப்படுகின்றது என்று பேசினார்.

இந்நிகழ்ச்சியில் வேளாண்மை அலுவலர் காசிவிஸ்வநாதன் உதவி வேளாண்மை அலுவலர்கள் கணேசன், சிவக்குமார், விஜயரத்தினம், அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் சந்தனமேரி, தொழில்நுட்ப வல்லுநர்கள் வேலு, மோகன்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.