அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

நீர் சுழற்சியில் சிக்கிய பொறியியல் மாணவர் சடலம் 5 நாட்களுக்கு பின்னர் மீட்பு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காட்டாற்று வெள்ளத்தின் நீர் சுழற்சியில் சிக்கிய பொறியியல் மாணவரின் சடலம் 5 நாட்களுக்குப் பின்னர் மீட்கப்பட்டுள்ளது.

News image
Updated On :23 நவம்பர் 2015, 11:09 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காட்டாற்று வெள்ளத்தின் நீர் சுழற்சியில் சிக்கிய பொறியியல் மாணவரின் சடலம் 5 நாட்களுக்குப் பின்னர் மீட்கப்பட்டுள்ளது.

மம்சாபுரத்தைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் பழனிச்சாமி நாடார். இவரது ஒரே மகன் சந்தோஷ்குமார் (19). இவர் கோயமுத்தூரில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் பி.இ. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். விடுமுறைக்கு வீட்டிற்கு வந்த அவர் வியாழக்கிழமை நண்பர்களுடன் செண்பகத்தோப்பு பேயனாற்று ஓடையில் வந்த காட்டாற்று வெள்ள நீரில் குளித்துள்ளார்.

அப்போது ஏற்பட்ட நீர் சுழற்சியில் சிக்கிய சந்தோஷ்குமரின் சடலம் திங்கள்கிழமை பேயனாற்று ஓடையில் விழுந்து கிடந்த ஒரு மரத்தின் அடியில் மீட்கப்பட்டது. மம்சாபுரம் போலீஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பழனிச்சாமி கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.