தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

மேற்குத் தொடர்ச்சி மலையில் பலத்த மழை: நிரம்பியது கொடுமுடியாறு அணை!

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த பலத்த மழையால் 52.50 அடி கொள்ளளவு கொண்ட கொடுமுடியாறு அணை நிரம்பியது. அணைகளிலிருந்து தாமிரவருணி ஆற்றில் 2500 கனஅடி உபரி திறந்து விடப்பட்டுள்ளது.

News image
Updated On :30 நவம்பர் 2015, 5:08 am

ஷேக் அப்துல்காதர்

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த பலத்த மழையால் 52.50 அடி கொள்ளளவு கொண்ட கொடுமுடியாறு அணை நிரம்பியது. அணைகளிலிருந்து தாமிரவருணி ஆற்றில் 2500 கனஅடி உபரி திறந்து விடப்பட்டுள்ளது.

சில தினங்களாக ஓய்ந்திருந்த மழை கடந்த 2 தினங்களாக பெய்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த பலத்த மழையால் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. 52.50 அடி கொள்ளளவு கொண்ட கொடுமுடியாறு அணை திங்கள்கிழமை முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது.
திங்கள்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை (மில்லி மீட்டரில்): பாபநாசம் அணை-70, பாபநாசம் கீழ் அணை-80, சேர்வலாறு அணை-35, மணிமுத்தாறு அணை-30.6, கடனாநதி அணை-62, ராமநதி அணை-45, கருப்பாநதி அணை-20, குண்டாறு அணை-27, அடவிநயினார் அணை-20, நம்பியாறு அணை-33, கொடுமுடியாறு அணை-17.

பிற பகுதியில் பதிவான மழை: பாளையங்கோட்டை-50, திருநெல்வேலி-30, அம்பாசமுத்திரம்-28.6, சேரன்மகாதேவி-45, கன்னடியன் அணைக்கட்டு-29, சங்கரன்கோவில்-57, சிவகிரி-45.2, தென்காசி-74, செங்கோட்டை-29, அதிகபட்சமாக ஆய்க்குடி-80.8, ஆலங்குளம்-65.2, ராதாபுரம்-30, நான்குனேரி-56, களக்காடு-28.2, மூலக்கரைப்பட்டி-27.

தூத்துக்குடி மாவட்டத்தில்: தூத்துக்குடி-50.5, ஓட்டப்பிடாரம்-32, மணியாச்சி-44, கயத்தாறு-39, ஸ்ரீவைகுண்டம்-3, கடம்பூர்-44, கழுகுமலை-55, சாத்தான்குளம்-44, திருச்செந்தூர்-24, காயல்பட்டினம்-15.5, குலசேகரபட்டினம்-40, கோவில்பட்டி-59, விளாத்திகுளம்-27, எட்டயபுரம்-45.

நீர்வரத்து அதிகரிப்பு: தொடர் மழையால் இம்மாவட்டத்தில் கருப்பாநதி, கடனாநதி, ராமநதி, குண்டாறு, அடவிநயினார், சேர்வலாறு அணைகளை தொடர்ந்து கொடுமுடியாறு அணையும் நிரம்பியது. அணைக்கு விநாடிக்கு 110 கனஅடி நீர்வரத்து இருந்தது.

பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 2000 கனஅடி, சேர்வலாறு அணைக்கு விநாடிக்கு 1200 கனஅடி, மணிமுத்தாறு அணைக்கு 404 கனஅடி, கடனாநதி அணைக்கு விநாடிக்கு 600 கனஅடி, ராமநதி அணைக்கு 100 கனஅடி, கருப்பாநதி அணைக்கு 100 கனஅடி,  அடவிநயினார் அணைக்கு 83 கனஅடி, வடக்குப் பச்சையாறு, நம்பியாறு அணைக்கு தலா 50 கனஅடியும் நீர்வரத்து இருந்தது.

அணைகள் நிரம்பிய நிலையில் கடனாநதி அணையில் 600 கனஅடி, ராமநதி அணையில் 100, கருப்பாநதி அணையில் 300 கனஅடி, அடவிநயினார் அணையில் 83 கனஅடி உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் பாபநாசம் கீழ் அணையில் இருந்து 1500 கனஅடி உபரிநீர் தாமிரவருணியில் செல்கிறது.

அணைகளின் நீர்மட்டம்: பாபநாசம் அணையின் நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 138.05 அடியாக இருந்தது. அணை முழுக் கொள்ளளவை எட்ட இன்னும் 5 அடி தேவையுள்ளது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 150.92 அடி, மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 91.25 அடி, கடனாநதி அணையின் நீர்மட்டம் 83.50 அடி, ராமநதி அணையின் நீர்மட்டம் 82 அடி, கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 70.86 அடி, குண்டாறு அணையின் நீர்மட்டம் 36.10 அடி, அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 132 அடி, வடக்குப் பச்சையாறு அணையின் நீர்மட்டம் 41.25 அடி, நம்பியாறு அணை நீர்மட்டம் 22.96 அடியாகவும் இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.