மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் நாளை தொடக்கம்!மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!இந்தியாவுக்கு வரவேண்டிய கப்பல்கள் ஹோா்முஸ் நீரிணையில் சிக்கித் தவிப்பு!21 மாநிலங்கள் - யூனியன் பிரதேசங்களுக்கு மீண்டும் மண்ணெண்ணெய் ஒதுக்கீடுஈரான் பொதுக் கட்டமைப்பை நிா்மூலமாக்குவோம்: டிரம்ப் மிரட்டல்
/

லிப்ட் கேட்டு ஏறிய பெண் இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்து பலி

விராலிமலை அருகே வியாழக்கிழமை இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழந்தார்.

News image
Updated On :1 அக்டோபர் 2015, 6:55 am

சி. உதயகுமார்

விராலிமலை அருகே வியாழக்கிழமை இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழந்தார்.

விராலிமலை அருகேயுள்ள அகரப்பட்டியைச் சேர்ந்தவர் துரை மனைவி சடச்சியம்மாள்(39) இவரும் அதே ஊரைச்சேர்ந்த பெருமாள் மனைவி அனுராதாவும்(20) விராலிமலை-மதுரை நான்கு வழிச்சாலையில் லஞ்சமேடு செல்வதற்காக பேருந்துக்காக காத்திருந்தனர். அப்போது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த கண்ணுச்சாமி(35) என்பவரது வாகனத்தில் லிப்ட் கேட்டு ஏறிச்சென்றுள்ளனர்.

இந்நிலையில் லஞ்சமேடு அருகே வாகனம் வந்த போது, நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் வண்டி இறங்கியுள்ளது. இதில் தடுமாறிய சடச்சியம்மாள் தார்சாலையில் விழுந்துள்ளார். இதில் தலையில் காயமடைந்த சடச்சியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கண்ணுச்சாமி, அனுராதா இருவரும் காயமின்றி தப்பினர்.

இதுகுறித்து விராலிமலை காவல் நிலையத்தில் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.                                                

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.