திமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!பாஜக ஆட்சியில் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றப்படும்: ராஜ்நாத் சிங்பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ், திரிணமூல்: பாடம் புகட்டப்படும் - மோடி
/

கூரைக்குண்டு ஊராட்சியில் டெங்கு விழிப்புணர்வு முகாம்

சுகாதாரத்துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான டெங்கு விழிப்புணர்வு முகாம் இன்று நடைபெற்றது.

Updated On :6 அக்டோபர் 2015, 1:41 pm

சுகாதாரத்துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான டெங்கு விழிப்புணர்வு முகாம் இன்று நடைபெற்றது.

விருதுநகர் சுகாதார மாவட்ட துணை இயக்குநர் பழனிச்சாமி உத்தரவின் பேரில் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு டெங்கு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதில், அழகாபுரி ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில்  கூரைக்குண்டு ஊராட்சியைச் சேர்ந்த அல்லம்பட்டி சமுதாயக் கூடத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு வட்டார மருத்துவ அலுவலர் அனிதா தலைமை வகித்தார்.

இதில், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கலந்து கொண்டு டெங்கு காய்ச்சல் நோய் பரவும் முறை குறித்தும், அதற்கான முன்னேற்பாடுகள் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விளக்கமாக எடுத்துரைத்தார். அதேபோல், மருத்துவர் ஜெகன் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருந்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் அதற்கான சிகிச்சை முறைகள் தொடர்பாகவும் தெரிவித்தார்.

அதையடுத்து, டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் ஏ.டி.எஸ் கொசுக்கள் வாழ்க்கை சுழற்சி குறித்த குறும் படமும் திரையிடப்பட்டது. அதைத் தொடர்ந்து முகாமில் பங்கேற்றோருக்கு நிலவேம்பு கசாயமும் அளிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை வில்வசௌந்தரநாதன், அருண்பாண்டியன் ஆகியோர் செய்திருந்தனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.