விருதுநகர் மாவட்டத்தில் பொதுவிநியோகம் திட்டம் தொடர்பான குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 10-ம் தேதி நடைபெற இருக்கிறது.
இது தொடர்பாக ஆட்சியர் வே.ராஜாராமன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்:
இம்மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் பொதுவிநியோகத்தில் காணப்படும் குறைகளை களையும் வகையில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்த உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில் மேற்குறிப்பிட்ட நாளில் ஒவ்வொரு வட்டாரத்திலும் அந்தந்த பகுதியின் வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் நடத்தப்பட இருக்கிறது.
இதில், ராஜபாளையம்-ஊஞ்சாம்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர்-கான்சாபுரம், சிவகாசி-வெற்றிலையூரணி, சாத்தூர்-சிந்துவம்பட்டி, விருதுநகர்-சிவஞானபுரம், அருப்புக்கோட்டை-கொப்புசித்தம்பட்டி, காரியாபட்டி-பிசிண்டி, திருச்சுழி-உலக்குடி ஆகிய கிராமங்களில் காலை 10 மணிக்கு தொடங்கி தொடர்ந்து 1 மணி வரைக்கும் நடைபெற இருக்கிறது. இக்கூட்டத்தில் பொது விநியோக திட்டம் செயல்படுத்துவதில் காணப்படும் குறைகள் குறித்து பொதுமக்கள் நேரிலோ அல்லது மனு மூலமாகவோ தெரிவித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது.
எனவே தங்கள் பகுதியில் நடத்தப்பட இருக்கிற கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயனடையலாம். அதோடு, குடும்ப அட்டையி்ல் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் முகவரி மாற்றம் தொடர்பான மனுக்கள் கொடுத்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாகவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஓபிசி இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு ஒதுக்கும் திரிணமூல் காங்கிரஸ்: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி பிரசாரம்!

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தேனாம்பேட்டையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் சாலைவலம்!

ராகுல்காந்தி நாளை குளச்சல், நான்குனேரியில் பிரசாரம்!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

