திமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!பாஜக ஆட்சியில் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றப்படும்: ராஜ்நாத் சிங்பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ், திரிணமூல்: பாடம் புகட்டப்படும் - மோடி
/

பயிர் காப்பீடு செய்வதற்கு கால அவகாசம் நீட்டிப்பு

விருதுநகர் மாவட்டத்தில் பயிர் காப்பீடு செய்யும் விவசாயிகளுக்கு கால அவகாசம் நீட்டிப்பு செய்துள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Updated On :7 அக்டோபர் 2015, 1:58 pm

விருதுநகர் மாவட்டத்தில் பயிர் காப்பீடு செய்யும் விவசாயிகளுக்கு கால அவகாசம் நீட்டிப்பு செய்துள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஆட்சியர் வே.ராஜாராமன் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:  இம்மாவட்டத்தில் நிகழாண்டிற்கான பயிர் காப்பீட்டு திட்டம் தேசிய வேளாண்மை காப்பீட்டு திட்டம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், 12 பயிர்களுக்கு அறிவிக்கப்பட்டு பயிர் காப்பீடு விவசாயிகளிடம் இருந்து பிரிமியம் பெறப்படுகிறது.

இம்மாவட்டத்தில் கம்பு, சோளம், மக்காச்சோளம், துவரை, உளுந்து, கடலை மற்றும் எள் ஆகிய பயிர்களுக்கு கடன்பெறும் விவசாயிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட அறிக்கையின் படி பிரிமியம் செலுத்த செப்.30ம் தேதி ஆகும்.

தற்போது, இக்கால அவகாசம் இம்மாத இறுதி வரையில் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இப்பயிர் செய்துள்ள விவசாயிகள் அனைவரும் இவ்வாய்ப்பை பயன்படுத்தி பயிர் காப்பீடு செய்து பயனடையும் படி அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.