திமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!பாஜக ஆட்சியில் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றப்படும்: ராஜ்நாத் சிங்பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ், திரிணமூல்: பாடம் புகட்டப்படும் - மோடி
/

விருதுநகரில் தமிழ்நாடு ஆசிரியர் இயக்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் வேலை நிறுத்தப்போராட்டம்

15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் வேலை நிறுத்தம் செய்து இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On :8 அக்டோபர் 2015, 1:42 pm

15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் வேலை நிறுத்தம் செய்து இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஜாக்டோ மாவட்ட தொடர்பாளர் மற்றும் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில துணைத்தலைவர் ச.சந்தானகிருஷ்ணன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் சு.குணசேகரன் ஆகியோர் தலைமை வகித்தனர். தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கழகத்தின் பொதுச்செயலாளர் எஸ்.ராஜபாண்டியன், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில பொருளாளர் தே.அலெக்சாண்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், 6-வது ஊதியக்குழுவில் தமிழகத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மத்திய அரசில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும். அகவிலைப்படி 100 சதவீதம் அளவை கடந்து விட்டதால் 50 சதவீத படியை அடிப்படை ஊதியத்துடன் இணைத்து வழங்க வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களையும், தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கும் பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன் முறை செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர்  இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்தில், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கழகம், தமிழ்நாடு உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்கம், தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் உள்ளிட்ட அனைத்து சங்கங்களையும் சேர்ந்தோர் திரளாக கலந்து கொண்டனர்.

இம்மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளும் செயல்பட்ட நிலையில் 29 சதவீத ஆசிரியர்கள் மட்டுமே பணிக்கு வராமல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.