திமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!பாஜக ஆட்சியில் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றப்படும்: ராஜ்நாத் சிங்பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ், திரிணமூல்: பாடம் புகட்டப்படும் - மோடி
/

விருதுநகர் அருகே சிறுமியை மானபங்கம் செய்ததாக மாணவர்கள் உள்பட 4 பேர் கைது

விருதுநகர் அருகே சிறுமியை மானபங்கம் செய்ததாக பள்ளி மாணவர்கள் உள்பட 4 பேரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் இன்று கைது செய்தனர்.

Updated On :8 அக்டோபர் 2015, 1:07 pm

விருதுநகர் அருகே சிறுமியை மானபங்கம் செய்ததாக பள்ளி மாணவர்கள் உள்பட 4 பேரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் இன்று கைது செய்தனர்.

விருதுநகர் அருகே அரசகுடும்பன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி மனநலம் பாதிக்கப்பட்டதால் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தாராம். இந்நிலையில், புதன்கிழமை வீட்டிலிருந்த சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த பால்ராஜ்(19), புல்லட்பாண்டி(21) உள்பட மாணவர்கள் (பெயர்மாற்றம்) 9ம் வகுப்பு மாணவர் முத்து(14), 10-ம் வகுப்பு மாணவர் மகேந்திரன்(15) ஆகியோர் அழைத்துச் சென்றதாக பெற்றோருக்கு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தகவல் தெரிவித்தனர்.

அதன் அடிப்படையில் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அவர்கள் மீது விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸாரிடம் புகார் செய்தனர். அதன் பேரில் போலீஸார் பால்ராஜ், புல்லட்பாண்டி, மாணவர்களான முத்து, மகேந்திரன் ஆகியோரை கைது செய்தனர்.

மேலும், அவர்களிடம் விசாரணை செய்ததில், மேற்குறிப்பிட்ட நான்கு பேரும் சேர்ந்து மனநலம் பாதித்த சிறுமியை தங்களது வீடுகளுக்கும், பம்ப்செட் தோட்டத்திற்கும் ஏமாற்றி அழைத்துச் சென்று மானபங்கம் செய்துள்ளதாக மகளிர் காவல் நிலைய போலீஸாரிடம் தகவல் தெரிவித்தனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.