திமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!பாஜக ஆட்சியில் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றப்படும்: ராஜ்நாத் சிங்பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ், திரிணமூல்: பாடம் புகட்டப்படும் - மோடி
/

திருச்சுழி அருகே பெண்ணை மானபங்கம் செய்ய முயற்சி

திருச்சுழி அருகே பெண்ணை மானபங்கம் செய்ய முயற்சி செய்த விவசாயியை நரிக்குடி போலீஸார் கைது செய்தனர்.

Updated On :10 அக்டோபர் 2015, 2:34 pm

திருச்சுழி அருகே பெண்ணை மானபங்கம் செய்ய முயற்சி செய்த விவசாயியை நரிக்குடி போலீஸார் கைது செய்தனர்.

திருச்சுழி அருகே காரைகுளத்தைச் சேர்ந்த மலைராஜின் மனைவி பெரிசாள்(40). இவர்கள் சீமைக்கருவேல மரங்கள் வெட்டி பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கிராமம் அருகே உள்ள விளைநிலத்தில் உள்ள மரங்களை ரூ.2 ஆயிரம் கொடுத்து விலைக்கு வாங்கியுள்ளனர். அதை இன்று பெரிசாள் மரம் வெட்டிக் கொண்டிருந்தாராம். அப்போது, அதே ஊரைச் சேர்ந்த விவசாயி திலகேஸ்வரன்(45) என்பவர் என்னுடைய நிலத்தில் உள்ள விறகை எப்படி வெட்டலாம் எனக் கூறி சேலை பிடித்து மானபங்கம் செய்ய முயன்றாராம்.

இது குறித்து பெரிசாள் நரிக்குடி காவல் நிலையத்தில் புகார் செய்தாராம். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிந்து விவசாயி திலகேஸ்வரனை கைது செய்து சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.