விராலிமலை, அன்னவாசல் பகுதிகளில் காற்றுடன் கூடிய பலத்த மழை
விராலிமலை, அன்னவாசல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காற்றுடன் கூடிய பலத்த மழை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்ததால் விவாசாயிகள் மற்றும் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


விராலிமலை, அன்னவாசல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காற்றுடன் கூடிய பலத்த மழை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்ததால் விவாசாயிகள் மற்றும் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
விராலிமலை, அன்னவாசலில் செவ்வாய்க்கிழமை காலையிலிருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் மதியம் 2 மணியளவில் வானம் இருட்ட தொடங்கியதுடன் பலத்த காற்றும் வீசியது.
அதனைத் தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இந்த மழை சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. திடீரென மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. கடந்த சில நாட்களாக பொதுமக்களை வாட்டி வதைத்து வந்த வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த காற்று வீசியதால் பொது மக்கள் மற்றும் விவாசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...