மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

திருச்செந்தூர் கோவில் ஆவணித் திருவிழா

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவில் ஆவணித் திருவிழா 3-ம் திருவிழாவை முன்னிட்டு சுவாமி குமரவிடங்க பெருமான் முத்துகிடா வாகனத்திலும், வள்ளி அம்மன் வெள்ளி அன்ன வாகனத்திலும் எழுந்தருளினர்.

Updated On :5 செப்டம்பர் 2015, 3:43 pm IST

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவில் ஆவணித் திருவிழா 3-ம் திருவிழாவை முன்னிட்டு சுவாமி குமரவிடங்க பெருமான் முத்துகிடா வாகனத்திலும், வள்ளி அம்மன் வெள்ளி அன்ன வாகனத்திலும் எழுந்தருளினர்.

இக்கோவிலில் ஆவணித் திருவிழா புதன்கிழமையன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 3-ம் நாள் திருவிழாவான நேற்று காலை 7 மணிக்கு மேலக்கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமான் பூங்கேடய சப்பரத்திலும், வள்ளி அம்மன் கேடய சப்பரத்திலும் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வந்து மேலக்கோவில் சேர்ந்தனர்.  மாலையில் மேலக்கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமான் தங்கமுத்துக்கிடா வாகனத்திலும், வள்ளி அம்மன் வெள்ளி அன்ன வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களக்கு காட்சி அளித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.