லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

விருதுநகர் அருகே தூய வேளாங்கண்ணி ஆலய தேர்ப்பவனி

விருதுநகர் அருகே ஆர்.ஆர்.நகரில் தூய வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழாவை முன்னிட்டு தேர்ப்பவனி நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது. இதில், அப்பகுதியைச் சேர்ந்த கிறிஸ்துவர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

Updated On :9 செப்டம்பர் 2015, 1:45 pm

விருதுநகர் அருகே ஆர்.ஆர்.நகரில் தூய வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழாவை முன்னிட்டு தேர்ப்பவனி நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது. இதில், அப்பகுதியைச் சேர்ந்த கிறிஸ்துவர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

தூய வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா கடந்த 31-ம் தேதி இரவு கொடியேற்றத்துடன் தொடங்கி, தொடர்ந்து 10 நாள்கள் நடைபெற்றது. இதில், ஒவ்வொரு நாளும் திருநாள் திருப்பலி மற்றும் மறையுரை வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்ப்பவனி நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு தேனி மறைமாவட்ட அதிபர் எம்.ஜான்மார்ட்டின் அடிகளார், ஆர்.ஆர்.நகர் ஜே.பென்டிக்ட் பர்னபாஸ் அடிகளார், சிந்தலைச்சேரி சிலுவை மிக்கேல்ராஜ் அடிகளார், விருதுநகர் தாமஸ் எடிசன் அடிகளார் ஆகியோர் தலைமையில் தேர்ப்பவனி நடைபெற்றது. இதில், தேரில் தூய வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னையின் திருஉருவம் மின்விளக்குகளாலும், வண்ணமலர்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.