தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் மூலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் தக்கைபூண்டு விதைகள் மானியத்தில் விநியோகம் செய்யப்பட இருப்பதாக கூட்டுறவு துறை மண்டல இணைப்பதிவாளர் சி.குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்: விவசாயிகள் பயனடையும் வகையில் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் சார்பில் பல்வேறு மானிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில், இத்திட்டத்தின் மூலம் தக்கைபூண்டு பயிரிடும் விவசாயிகளுக்கு மானியத்தில் விநியோகம் செய்யப்பட இருக்கிறது. அதன் அடிப்படையில் இம்மாவட்டத்தில் 1280 ஹெக்டேர் பரப்பளவுக்கு விதைகள் விநியோகம் செய்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், ஒரு ஹேக்டேருக்கு பின்னேற்பு மானியமாக ரூ.2 ஆயிரம் அல்லது 50 சதவீதம் இவற்றில் எது குறைவோ அத்தொகையை வழங்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
தற்போது, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, மகாராஜபுரம், சேத்தூர், சிங்கராஜாகோட்டை, மம்சாபுரம், பாட்டகுளம் சல்லிபட்டி, மல்லி, ஸ்ரீவில்லிபுத்தூர், அத்திக்குளம், வ.புதுப்பட்டி, சுந்தரபாண்டியம், குன்னூர் சேதுநாராயணபுரம், தைலாபுரம், திருத்தங்கல், மங்கலம், புதுக்கோட்டை உள்பட 17 கூட்டுறவு கடன் வங்கிகளிலும், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சிவகாசி ஆகிய பகுதிகளில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் சங்கங்களிலும் தக்கைபூண்டு விதை போதிய அளவு இருப்பில் உள்ளது.
எனவே இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் விவசாயிகள் அந்தந்த பகுதிகளில் தொடக்க வேளாண்மை கடன் சங்கங்களை அணுகி தக்கைபூண்டு விதைகளை வாங்கி பயனடையுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

போகலூா் ஒன்றியத்தில் மருத்துவக் கழிவு ஆலை அமைக்க விட மாட்டோம்! - நதக வேட்பாளா் உறுதி

ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

இருசக்கர வாகன விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

ரூ. 25 லட்சம் மோசடி: உணவக உரிமையாளா் மீது வழக்கு
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

