லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

விருதுநகர் தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் கூட்டம்

விருதுநகர் தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் வருகிற 13-ம் தேதி நடைபெற இருப்பதாக தெற்கு மாவட்ட செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.

Updated On :10 செப்டம்பர் 2015, 1:59 pm

விருதுநகர் தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் வருகிற 13-ம் தேதி நடைபெற இருப்பதாக தெற்கு மாவட்ட செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

விருதுநகர் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மேற்குறிப்பிட்ட நாளில் கந்தசாமி-ராஜம்மாள் அரங்கத்தில் காலை 10 மணிக்கு நடைபெற இருக்கிறது.

இக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலினின் நமக்கு நாமே சுற்றுப்பயணம், தேர்தல் நிதி வசூல் செய்தல் மற்றும் செப்.15-ம் தேதி முதல், தொடர்ந்து அக்.14ம் தேதி வரையில் வாக்காளர் நீக்கல், திருத்தம் சிறப்பு முகாம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது.

அதனால், இக்கூட்டத்தில் மாவட்ட, மாநில கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, பேரூர், நகர் கழகம் உள்ளிட்ட அனைத்து அணியினரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.