இளைஞர்கள் பயனடையும் வகையில் தனியார் நிறுவன நிறுவனங்கள் பங்கேற்கும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட இருப்பதாக விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ராமநாதன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
இம்மாவட்டத்தில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் ஆகியோர் பயனடையும் வகையிலும், தனியார் நிறுவனங்கள் ஒரே இடத்தில் திறமையானவர்களை தேர்வு செய்யவும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் மாதந்தோறும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் சென்னை, கோவை, ஈரோடு உள்ள பல்வேறு பெரிய நகரங்களில் உள்ள தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று, தங்களது நிறுவனத்திற்கான பணியாளர்களை தேர்வு செய்யவுள்ளனர். அதன் அடிப்படையில் இம்முகாமை சிறப்பாக நடத்தவும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் திட்டமிட்டுள்ளது.
எனவே அதன் அடிப்படையில் தனியார் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க விருப்புமுள்ள தனியார் துறை நிறுவனங்கள், தங்களது நிறுவனத்திற்கு தேவையான பணியாளர்கள் விவரம், கல்வித் தகுதியை குறிப்பிட்டு நேரிலோ, அஞ்சல் மூலமோ அல்லது deovirudhunagar@gmail.com என்ற மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குழந்தை திருமணத்தை தடுப்பேன் ஆண்டிபட்டி நாதக வேட்பாளா் கோமதி உறுதி

இருசக்கர வாகனங்கள் மோதல்: முதியவா் உயிரிழப்பு

கழுத்து நெரிக்கப்பட்ட காயங்களுடன் 19 வயதுப் பெண் சடலமாக மீட்பு! கணவா் தலைமறைவு!!

இலங்கை அதிபருடன் சி.பி. ராதாகிருஷ்ணன் சந்திப்பு! இந்திய வீட்டு வசதித் திட்டம், மீனவா் பிரச்னை குறித்து ஆலோசனை!!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

