விருதுநகர் தெற்கு, வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.
விருதுநகரில் உள்ள கந்தசாமி-ராஜம்மாள் அரங்கத்தில் நடந்த கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் தலைமை வகித்து பேசுகையில், வடக்கு மாவட்ட செயலாளரும், திருச்சுழி சட்டப்பேரவை உறுப்பினர் தங்கம் தென்னரசு முன்னிலை வகித்தார். அனைத்து நிர்வாகிகளும் பங்கேற்ற கூட்டத்தில் மு.க.ஸ்டாலினின் நமக்கு நாமே சுற்றுப்பயணம், தேர்தல் நிதி வசூல் செய்தல் மற்றும் செப்.15-ம் தேதி முதல், தொடர்ந்து அக்.14ம் தேதி வரையில் வாக்காளர் நீக்கல், திருத்தம் சிறப்பு முகாம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.
இதில், விருதுநகர் மாவட்டத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வருகிற 24-ம் தேதி ஒருநாள் நமக்கு நாமே சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதில், முதலில் ராஜபாளையம் சட்டப்பேரவை தொகுதியில் தொடங்கி, ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், சாத்தூர், அருப்புக்கோட்டை, திருச்சுழி ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளில் பொதுமக்கள், பால் உற்பத்தியாளர்கள், பட்டாசு தொழிலாளர்கள், நூற்பாலை தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பட்டவர்களை சந்தித்து கலந்துரையாடல் செய்யவுள்ளார்.
அப்போது, திமுக நிர்வாகிகள் வரவேற்பு அளிப்பது மற்றும் அதையடுத்து நடந்து கொள்ள வேண்டிய முறைகள் குறி்த்து தெற்கு மாவட்ட செயலாளர் மற்றும் வடக்கு மாவட்ட செயலாளர் ஆகியோர் நிர்வாகிளுக்கு விளக்கமாக எடுத்துரைத்தனர். இக்கூட்டத்தில் மாவட்ட, மாநில கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, பேரூர், நகர் கழகம் உள்ளிட்ட அனைத்து அணியினரும் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

100 நாள் வேலைத் திட்டம் 150 நாள்களாக உயா்த்தப்படும்: கோபி தொகுதி அதிமுக வேட்பாளா் வி.பி. பிரபு
பேரவைத் தோ்தல்கள்! 11,000 சமூக ஊடக பதிவுகள் மீது தோ்தல் ஆணையம் நடவடிக்கை!

சூடான பால் கொட்டி காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ரூ.10 ஆயிரம்! கோவை வடக்கு வேட்பாளா் பிரசாரம்
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

