சென்னை வந்தார் ராகுல் காந்தி!சிஜேபி போராட்டம்: விமானத்திலேயே கைது செய்யப்பட்ட அபிஜீத் தீப்கே!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 520 உயர்வு!ஜந்தர் மந்தரில் போராட்டம்: 150 சிஜேபி ஆதரவாளர்கள் கைது!பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ வழித்தடத்தில் இணைப்பு பேருந்து சேவை: மாநகர போக்குவரத்து கழகம்இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேலின் உயரிய விருது அறிவிப்புஏா் இந்தியா, ஆகாசா ஏா் விமானக் கட்டணங்களும் உயா்வுஎதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி இன்று சென்னை வருகை: மாணவா் சந்திப்பு நிகழ்வில் பங்கேற்கிறாா்திருக்கோயில் பணியாளா்களுக்கான திருமணக் கடன் உயா்வு: தமிழக அரசு அரசாணைபிரதமா் மோடி நாளை சென்னை வருகை: 22,000 போலீஸாருடன் ஐந்தடுக்கு பாதுகாப்பு

அரசின் சாதனைகளைக் கூறி தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம்: அதிமுகவினருக்கு ஜெயலலிதா வேண்டுகோள்

அரசின் சாதனைகளைக் கூறி, அடுத்து வரும் பேரவைத் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெறுவோம் என்று அதிமுகவினருக்கு முதல்வரும்,

Published On :

அரசின் சாதனைகளைக் கூறி, அடுத்து வரும் பேரவைத் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெறுவோம் என்று அதிமுகவினருக்கு முதல்வரும், கட்சிப் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்தார்.
 முன்னாள் முதல்வர் அண்ணா துரையின் பிறந்த தினத்தை ஒட்டி, கட்சியினருக்கு ஜெயலலிதா திங்கள்கிழமை விடுத்த மடலின் விவரம்:
 தமிழ் இனத்தின் முன்னேற்றத்தை தனது வாழ்வின் இலக்காகக் கொண்டு, அதை அடைந்திடத் தன்னையே அர்ப்பணித்தவர் அண்ணா. எளிய குடும்பத்தில் பிறந்து, கடுமையான உழைப்பையும், வாழ்வின் இலக்கணங்களையும் தந்தை பெரியாரிடத்தில் கற்று, புத்துலகம் படைத்திட புதிய பாதை அமைத்திடல் அவசியம் என்பதை உணர்ந்து புதிய அரசியல் இயக்கம் படைத்திட்டார் அண்ணா. அந்த இயக்கத்தை தீய சக்தியிடம் இருந்து மீட்டெடுத்து, அதிமுக எனும் மாபெரும் இயக்கத்தை, எம்.ஜி.ஆர். உருவாக்கினார். அவரது வழியில் இந்த இயக்கம் புதுப்புது வெற்றிச் சிகரங்களை அடைய, அதிமுக எனும் இயக்கத்தை நான் வழிநடத்தி வருகிறேன்.
 தமிழக மக்களுக்காக தன்னையே அர்ப்பணித்து வாழ்கின்ற பெரும் பாக்கியத்தை இறைவன் எனக்கு அருளி இருக்கிறார். எம்.ஜி.ஆரின் அரசியல் பாதையில், மக்கள் நலனைக் காப்பதிலும், மாநிலத்தின் உரிமைகளை மீட்பதிலும், பெண் கல்வியை வளர்ப்பதிலும் எனது தலைமையிலான அதிமுக அரசு நாட்டுக்கே முன்னோடியாகத் திகழ்கிறது.
 உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலமாக தமிழகத்தில் மிகப் பெரும் தொழில் புரட்சி ஏற்படும். குறிப்பாக, தமிழகத்தின் தென் மாவட்டங்கள் வளம் அடையும். அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெறப் போகிறார்கள். எண்ணற்ற இளைஞர்களுக்கும், இளம்பெண்களுக்கும் வேலைவாய்ப்பு, அவர்களின் குடும்பங்களுக்கு நிரந்தர வருவாய், பல புதிய தொழிற்சாலைகளை சிறு, குறு தொழில் நிறுவனங்கள் தொடங்குவதற்கான வாய்ப்பு ஆகியவற்றை உலக முதலீட்டாளர்கள் சந்திப்பு உருவாக்கித் தந்துள்ளது.
 தேர்தலில் வெற்றி: அதிமுக அரசு நிகழ்த்தியிருக்கும் மகத்தான சாதனைகளை தமிழக மக்கள் அனைவருக்கும் எடுத்துக் கூற வேண்டும். அடுத்து வரும் சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் அதிமுகவை மகத்தான வெற்றி பெறச் செய்வது கட்சியினர் ஒவ்வொருவரின் தலையாயப் பணியாக அமைந்திட வேண்டும்.
 அண்ணாவின் பிறந்த நாளில் அதற்காக சபதம் ஏற்க வேண்டும். இந்த ஆண்டு அண்ணா பிறந்த நாளில் கட்சியினரின் முன்வைக்கும் பெரும் பணி இதுவாகும். இந்தப் பணியைச் செய்து முடித்து அடுத்து வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் நாம் பெறவிருக்கும் மகத்தான வெற்றியை அண்ணாவுக்கும், எம்.ஜி.ஆருக்கும் காணிக்கை ஆக்குவோம் என்று தனது அறிக்கையில் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.