தமிழகத்தில் தொடங்கியது வடகிழக்கு பருவமழை வங்கக் கடல், அரபிக் கடலில் ஒரே நேரத்தில் 2 புயல் சின்னங்கள் உருவாக வாய்ப்பு சிஜேபி-இன் தேசியக் கொடி போராட்டம்: தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு தீவிரமாகப் பரவும் இன்ஃப்ளூயன்ஸா: முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்ட சுகாதாரத் துறைகோவையில் பெரியாா் அறிவுலகம்: முதல்வா் இன்று திறந்துவைக்கிறாா்மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

கடும் பாதிப்புள்ள மாற்றுத் திறனாளிகள் 960 பேருக்கு சிறப்பு சக்கர நாற்காலிகள்: முதல்வர் அறிவிப்பு

தண்டுவட பாதிப்பு போன்ற கடும் பாதிப்புள்ள 960 மாற்றுத் திறனாளிகளுக்கு மாவட்டந்தோறும் சிறப்பு சக்கர நாற்காலிகள் வழங்கப்படும் என்று

Updated On :

தண்டுவட பாதிப்பு போன்ற கடும் பாதிப்புள்ள 960 மாற்றுத் திறனாளிகளுக்கு மாவட்டந்தோறும் சிறப்பு சக்கர நாற்காலிகள் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
 சட்டப் பேரவையில் விதி 110-இன் கீழ், திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பு:
 தமிழகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கென 23 அரசு சிறப்புப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. புதுக்கோட்டையில் காது கேளாதோருக்கான அரசு நடுநிலைப் பள்ளி 22 ஆண்டுகளாக வாடகைக் கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது.
 அந்தப் பள்ளிக்கு 5,414 சதுர அடி பரப்பில் ரூ. ஒரு கோடி செலவில் விடுதி, வகுப்பறைகளுடன் கூடிய சொந்தக் கட்டடம் கட்டப்படும்.
 மாற்றுத் திறனாளிகளுக்கு அளிக்கப்படும் பல்வேறு திட்டங்களில் மடக்கு சக்கர நாற்காலியும் ஒன்றாகும். இந்தச் சாதாரண மடக்கு சக்கர நாற்காலிகள் முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்ட நபர்களின் தேவையை நிறைவு செய்வதாக இல்லை.
 மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ், முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரத்யேகமான உபகரங்கள் ஏதுமில்லை.
 எனவே, முதுகுத் தண்டுவடம், நரம்பு உறை தேய்வு நோய், தண்டுவடக் குறைபாடு நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என ரூ. 20 ஆயிரம் மதிப்பீட்டில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சிறப்பு சக்கர நாற்காலி வழங்கப்படும்.
 முதல்கட்டமாக, ஒரு மாவட்டத்துக்கு 30 என்ற எண்ணிக்கையில் மொத்தம் 960 பேருக்கு ரூ. 1.92 கோடியில் சக்கர நாற்காலிகள் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.