படிவம் 6 திருத்தத்துக்கு அனுமதி அளித்தது யார்? - கனிமொழி கேள்விகல்வி நிறுவனங்கள் மீது ஆர்எஸ்எஸ் - பாஜக தாக்குதல்! போர் வலுப்பெறும் - நேஹா போரா எச்சரிக்கை!28,000 அடி கீழே இறங்கிய லண்டன் - சிகாகோ விமானம்! அயர்லாந்தில் அவசரமாகத் தரையிறக்கம்!போக்சோ வீரமணி வழக்கில் மேலும் 3 பேர் கைது!ஒரு நிமிடம் கூட பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் ஞானேஷ் குமார்: பெ. சண்முகம்தமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்ஒலிம்பிக் போட்டிக்கு நிறைய நேரம் இருக்கிறது: ஹாக்கி கேப்டன் ஹர்மன்பிரீத்தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றத் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம்!5 சிறுத்தைக் குட்டிகள் பிறப்பு; நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு!கிராமுக்கு ரூ. 10,000 வரை நகைக்கடன்: கூட்டுறவுத் துறை அறிவிப்பு!

கணவரைக் கொன்ற மனைவிக்கு ஆயுள் சிறை

கொதிக்கும் எண்ணெய் ஊற்றி கணவரைக் கொன்ற மனைவிக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து,

Published On :

கொதிக்கும் எண்ணெய் ஊற்றி கணவரைக் கொன்ற மனைவிக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, சேலம் மாவட்ட நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
 சேலம் மாவட்டம், மேச்சேரி அரங்கனூர் மேட்டுத் தெருவைச் சேர்ந்த கோபால் மகன் பெரியசாமி (33). ஈரோடு தனியார் நிறுவனத்தில் லாரி ஓட்டுநர். இவரது மனைவி சித்ரா (31). இவர்களுக்கு 2 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர்.
 பெரியசாமியின் மனைவி சித்ரா கட்டட வேலைக்காக சேலத்துக்கு அடிக்கடி வருவாராம். அப்போது சித்ராவுக்கு பிற ஆண்களுடன் பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனை பெரியசாமி கண்டித்ததுடன், சேலத்துக்கு வேலைக்குச் செல்லக் கூடாது எனவும் கூறினாராம்.
 இதனால் ஆத்திரமடைந்த சித்ரா கடந்த 2012-ஆம் ஆண்டு ஜனவரி 6-ஆம் தேதி நள்ளிரவு வீóட்டில் தூங்கிக் கொண்டிருந்த கணவர் பெரியசாமியின் உடல் மீது, கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றியதாகக் கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த பெரியசாமியை உறவினர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு பெரியசாமி சிகிச்சை பலனின்றி ஜனவரி 14-ஆம் தேதி உயிரிழந்தார். இதுகுறித்து மேச்சேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சித்ராவைக் கைது செய்தனர். சேலம் மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 3 ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்று வந்தது. சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி என்.சேஷசாயி முன்னிலையில் இந்த வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
 விசாரணைக்குப் பிறகு நீதிபதி, கணவரை கொடூரமான முறையில் எண்ணெய் ஊற்றிக் கொலை செய்த சித்ராவுக்கு ஆயுள் தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதத்தைக் கட்டத் தவறினால் 2 மாதம் சிறைத் தண்டனையும் அனுபவிக்க வேண்டும் எனத் தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.