ஆரணி அருகே பாகிஸ்தான் உளவாளி கைது சன்ன ரகப் பொன்னி அரிசியைக் கொள்முதல் செய்வதற்கு அரசு எப்போது டெண்டர் விட்டது? உதயநிதி ஸ்டாலின் கேள்வி ஜம்முவில் எல்லை அருகே ட்ரோன் மீட்பு: காவல் துறையினர் தீவிர விசாரணை சென்னையில் இன்று இரவு முதல் மழை! மற்ற மாவட்டங்களில் மழை எப்படி இருக்கும்?புயல் எச்சரிக்கை: குடியரசுத் தலைவர் முர்முவின் ஒடிசா பயணம் ஒத்திவைப்பு கோயில்களில் பணம் கேட்டால் ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம்! அமைச்சர் ரமேஷ்மாயமான சிறுவர்களை மீட்டு, அனைத்து கோணங்களிலும் அரசு விசாரிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி ரெட் அலர்ட்: நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மூடல்! தேசிய பேரிடர் மீட்புப் படை விரைவு!அமைதிப் பத்திரத்தில் கையெழுத்திட மாட்டேன்! நேஹா போரா

கிரானைட் முறைகேடு அறிக்கை தாக்கல் எப்போது? சகாயம் பதில்

மதுரையில் நடைபெற்ற கிரானைட் முறைகேடு தொடர்பான விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் எப்போது தாக்கல் செய்யப்படும் என்பது குறித்து

Updated On :

மதுரையில் நடைபெற்ற கிரானைட் முறைகேடு தொடர்பான விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் எப்போது தாக்கல் செய்யப்படும் என்பது குறித்து செவ்வாய்க்கிழமை (செப். 15) தெரிவிப்பேன் என, விசாரணை அதிகாரி சகாயம் கூறினார்.
 மதுரையில் முறைகேடாக கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவுப்படி சட்ட ஆணையராக நியமிக்கப்பட்ட சகாயம் விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்த விசாரணை இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், சகாயம் தலைமையிலான விசாரணைக் குழுவினர் தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
 வஉசி துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர் ச. ஆனந்த சந்திரபோஸ் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து சகாயம் ஆலோசனை நடத்தினார். அப்போது, கிரானைட் ஏற்றுமதி தொடர்பாக துறைமுக அலுவலகங்களில் இருந்து முக்கிய ஆவணங்களை அவர் பெற்றுக் கொண்டார்.
 மேலும், தூத்துக்குடி துறைமுக நுழைவாயில் அருகேயுள்ள சுங்கத் துறை அலுவலகத்துக்குச் சென்ற சகாயம், ஏற்றுமதி பிரிவு உதவி ஆணையர் பழனிச்சாமி தலைமையிலான அதிகாரிகளுடன் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார். பின்னர், தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து ஏற்றுமதி செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த கிரானைட் கற்களை அவர் நேரடியாகப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மதுரை மாவட்டத்தில் இருந்து யார் பெயரில் கிரானைட் கற்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன என்ற விவரங்களையும் அவர் கேட்டறிந்தார்.
 பின்னர், செய்தியாளர்களிடம் சகாயம் கூறியதாவது:
 கிரானைட் முறைகேடு தொடர்பான விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறுவதை நிறுத்திக் கொண்டோம். விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்வோம். அது எப்போது என்பதை செவ்வாய்க்கிழமை (செப். 15) கூறுவேன். மதுரையில் நரபலி நடந்ததா என்பதை நீதிமன்றத்தில்தான் தெரிவிக்க உள்ளேன். இந்த விசாரணை எந்தவித இடையூறும் இல்லாமல் சுதந்திரமாக நடைபெற்று வருகிறது என்றார் அவர்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.