தவெக கூட்டணிக்கு பாமக வந்தால், விசிக வெளியேறும்! அமைச்சர் வன்னி அரசுவிசிக கூட்டணியைத் தக்கவைத்த திமுக விரும்பவில்லை: திருமாவளவன்எரிபொருள் போர்நிறுத்தம் அறிவிப்பு: உக்ரைன் - ரஷியா மீற வேண்டாம்! டிரம்ப் எச்சரிக்கைஎங்கள் செல்போன்களை பறித்தது காவல் துறை; ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் - சிஜேபி செளரவ் தாஸ்தில்லியில் தொடரும் சிஜேபி போராட்டம்: எம்பி ஜான் பிரிட்டாஸ் உட்பட 100 பேர் கைது! நாளை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! நாட்டில் 1300க்கும் அதிகமான பல்கலை., 5000க்கும் அதிகமான கல்லூரிகள்: பிரதமர் மோடிமத்திய - மாநில அரசு இணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் விஜய்

சிந்துவெளி நாகரிகத்தின் அடையாளங்களைக் காக்க வேண்டும்: கருணாநிதி வேண்டுகோள்

வீடுகள் கட்டுவதற்காக சிந்துவெளி நாகரிகத்தின் அடையாளச் சின்னங்கள் சிதைக்கப்படுவதில் இருந்து காக்க வேண்டும் என்று

Published On :

வீடுகள் கட்டுவதற்காக சிந்துவெளி நாகரிகத்தின் அடையாளச் சின்னங்கள் சிதைக்கப்படுவதில் இருந்து காக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 இதுதொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
 சிந்து சமவெளி நாகரிகத்தின் ஒரு பகுதியான ஹரப்பாவின் தொன்மை தகர்க்கப்பட்டு, வீடுகள் கட்டவும், விவசாய நில விரிவாக்கத்துக்கும் பயன்படுத்தப்படுவதாக பத்திரிகையில் செய்தி வந்துள்ளது.
 உத்தரப்பிரதேச மாநிலம், பக்பட் மாவட்டத்தில் உள்ள 5 ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த சிந்து சமவெளியில் மக்கள் வாழ்ந்த பகுதி தற்போது முறையாகப் பாதுகாக்கப்படாமல் அழிவின் விளிம்பில் உள்ளது.
 1957-ஆம் ஆண்டு அகழ்வாராய்ச்சியில் வெளிச்சத்துக்கு வந்த இந்த இடம், இந்தியாவிலேயே சரித்திர ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடம் எனக் கருதப்படுகிறது.
 கங்கைக்கும் யமுனைக்கும் இடையிலான இந்த இடத்தில் தொன்மைக் காலத்தில் மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் தென்பட்டன.
 ஆனால், தற்போது கிராம விவசாயிகள் தங்களுடைய விவசாயத்தை விரிவுபடுத்துவதற்காக பல நூற்றாண்டுகள் பழைமையும் பெருமையும் வாய்ந்த கட்டட அமைப்புகளைத் தகர்த்து வருகின்றனர்.
 சிலர் அந்தப் பகுதியில் தங்கள் வீடுகளையும், தங்கள் சமூகத்திற்கான நினைவிடங்களையும் கோயில் போன்ற அமைப்புகளையும் உருவாக்கி வருகின்றனர்.
 ஹரப்பா கலாசாரத்தின் மையமான இந்தப் பகுதி கண்டுபிடிக்கப்பட்டதற்குப் பிறகு பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது.
 ஆனால், தற்போது அந்த நிலை முற்றிலும் மாறி, சிறிது சிறிதாக அழிந்து வருகிறது.
 மிகத் தொன்மை மக்கள் வாழ்ந்த இந்தப் பகுதி ஹரப்பா கலாசாரத்தின் இறுதிக் கட்டத்தைச் சுட்டிக் காட்டுவதாகும்.
 எனவே, சிந்துவெளி நாகரிகத்தின் அடையாளச் சின்னங்களையும் நாகரிகப் பரப்பையும் காப்பாற்றிட பிரதமர் நரேந்திர மோடியும், உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவும் சரித்திரச் சிந்தனையோடு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.