கனமழை: நீலகிரியில் 6 தாலுகாக்களில் இன்று (அக். 24) பள்ளிகளுக்கு விடுமுறை!தமிழகத்தில் இரு நாள்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை! அக். 26-இல் புயல் உருவாக வாய்ப்பு!கடன் பத்திரங்கள் மூலம் ரூ. 9,000 கோடி திரட்டுகிறது தமிழக அரசு!அருணாசல் எல்லையில் ரோந்துப் பாதைகளை சீன படைகள் பின்பற்றாததால் பதற்றம்: இந்தியாபாகிஸ்தானில் இந்திய ஆதரவு பயங்கரவாதத்தை ஒழிப்போம்! ராணுவ தலைமைத் தளபதி முனீா்!ரூ. 84,084 கோடிக்கு ‘சமுத்ர மந்தன்’ திட்டம்: கடலுக்கு அடியில் எண்ணெய், எரிவாயு தேட வழிகாட்டுதல்கள் வெளியீடு

தமிழகத்திற்கு காவிரியிலிருந்து தண்ணீர் திறந்துவிட இயலாது: கர்நாடக அரசு தலைமைச்செயலாளர் கடிதம்

காவிரி நதியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட இயலாது என்று தமிழக அரசு தலைமைச்செயலாளருக்கு கர்நாடக அரசு தலைமைச்செயலாளர் கெளஷிக்முகர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.

Updated On :

காவிரி நதியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட இயலாது என்று தமிழக அரசு தலைமைச்செயலாளருக்கு கர்நாடக அரசு தலைமைச்செயலாளர் கெளஷிக்முகர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.

காவிரி நதியில் இருந்து தமிழகத்திற்கு அளிக்க வேண்டிய தண்ணீரை திறந்துவிடும்படி கர்நாடக அரசுக்கு அறிவுறுத்தும்படி தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திரமோடிக்கு அண்மையில் கடிதம் எழுதியிருந்தார். இதன் நகலை கர்நாடக அரசுக்கும் அனுப்பிவைத்திருக்கிறார்.

இந்நிலையில், காவிரி நதியில் இருந்துதமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட இயலாது என்று தமிழக அரசு தலைமைச்செயலாளருக்கு கர்நாடக அரசு தலைமைச்செயலாளர் கெளஷிக்முகர்ஜி கடிதம் எழுதியிருக்கிறார்.

அந்த கடிதத்தில் அவர் மேலும் கூறியிருப்பதாவது: காவிரி நடுவர்மன்றத்தின் இறுதித்தீர்ப்பின்படி தமிழக அரசுக்கு காவிரி நதியில் இருந்து கர்நாடக அரசு 192 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும். கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கர்நாடகத்தில் தற்போது கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை கர்நாடகத்தில் பொய்த்துவிட்டது. காவிரி நீர்ப்பிடிப்புப்பகுதிகளிலும் மழை பெய்யவில்லை. இதனால் காவிரி நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளில் போதுமான தண்ணீர் இருப்பு இல்லை. இந்த அணைகளில் இருப்பு உள்ள தண்ணீரை கர்நாடக மக்களின் குடிநீருக்காக பயன்படுத்த வேண்டியுள்ளது.

எனவே, காவிரி நடுவர்மன்ற உத்தரவுப்படி காவிரி நதியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட இயலாத சூழ்நிலையில் கர்நாடகம் உள்ளது. கடந்த மழை ஆண்டில் காவிரி நதியில் இருந்து நிர்ணயிக்கப்பட்ட அளவை காட்டிலும் கூடுதல் தண்ணீர் வழங்கபட்டுள்ளது. நிகழ் மழை ஆண்டில் ஜூன் 1-ஆம் தேதி முதல் செப்.4-ஆம் தேதிவரை 68 டிஎம்சி தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது. எனவே, கர்நாடகத்தின் சூழ்நிலையை தமிழக அரசு புரிந்துகொண்டு ஒத்துழைப்பு வழங்கும் என்றுஎதிர்ப்பார்க்கிறேன் என்று அந்த கடிதத்தில் கெளஷிக்முகர்ஜி குறிப்பிட்டிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.