கனமழை: நீலகிரியில் 6 தாலுகாக்களில் இன்று (அக். 24) பள்ளிகளுக்கு விடுமுறை!தமிழகத்தில் இரு நாள்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை! அக். 26-இல் புயல் உருவாக வாய்ப்பு!கடன் பத்திரங்கள் மூலம் ரூ. 9,000 கோடி திரட்டுகிறது தமிழக அரசு!அருணாசல் எல்லையில் ரோந்துப் பாதைகளை சீன படைகள் பின்பற்றாததால் பதற்றம்: இந்தியாபாகிஸ்தானில் இந்திய ஆதரவு பயங்கரவாதத்தை ஒழிப்போம்! ராணுவ தலைமைத் தளபதி முனீா்!ரூ. 84,084 கோடிக்கு ‘சமுத்ர மந்தன்’ திட்டம்: கடலுக்கு அடியில் எண்ணெய், எரிவாயு தேட வழிகாட்டுதல்கள் வெளியீடு

விருதுநகர் அருகே நோபிள் மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா விளையாட்டு போட்டி

விருதுநகர் அருகே நோபிள் மெட்ரிக்குலேசன் மேல்நிலை பள்ளியில் 13-ம் ஆண்டு விளையாட்டு விழா போட்டி நேற்று நடைபெற்றது.

Updated On :

விருதுநகர் அருகே நோபிள் மெட்ரிக்குலேசன் மேல்நிலை பள்ளியில் 13-ம் ஆண்டு விளையாட்டு விழா போட்டி நேற்று நடைபெற்றது.

இப்பள்ளி வளாகத்தில் நடந்த விளையாட்டு விழாவிற்கு முதல்வர் ஜெரால்டு ஞானரத்தினம் தலைமை வகித்தார். அப்பள்ளியின் செயலாளர் வெர்ஜின் இனிகோ முன்னிலை வகித்தார். துணை முதல்வர் உதயகுமாரி வரவேற்புரை வழங்கினார். இதில், சிறப்பு விருந்தினராக காமராஜர் தொழில்நுட்ப பொறியியல் கல்லூரியின் இயந்திர பிரிவு இணைப்பேராசிரியர் செந்தில், சாரண, சாரணீய இயக்கத்தின் மாவட்ட தலைவர் முத்துச்சிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில், மாணவ, மாணவிகள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். மேலும், மாணவ, மாணவிகள் யோகாசனத்தில் நடனபோட்டி மற்றும் நம் இந்தியா சுதந்திரத்திற்கு முன்பும், பின்னும் எவ்வாறு இருந்தது என்பதை செய்து காண்பித்தனர். அதேபோல், சிலம்பம், கராத்தே, ஜிம்னாஸ்டிக் போன்றவைகளை செய்து பார்வையாளர்களை மகிழ்ச்சிபடுத்தினர். அதைத் தொடர்ந்து கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு அதிக புள்ளிகள் பெற்று வெற்றி பெற்ற அணியினருக்கு கோப்பை வழங்கப்பட்டது. அதேபோல், இப்போட்டிகளில் கலந்து கொண்ட அனைவருக்கும் நினைவு பரிசுகளும் அளிக்கப்பட்டது. இதில் நிறைவாக ஆசிரியை ஞானசௌந்தரி நன்றி கூறினார்.  இதற்கான ஏற்பாடுகளை பள்ளி நி்ர்வாகத்தினர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.