ஆரணி அருகே பாகிஸ்தான் உளவாளி கைது சன்ன ரகப் பொன்னி அரிசியைக் கொள்முதல் செய்வதற்கு அரசு எப்போது டெண்டர் விட்டது? உதயநிதி ஸ்டாலின் கேள்வி ஜம்முவில் எல்லை அருகே ட்ரோன் மீட்பு: காவல் துறையினர் தீவிர விசாரணை சென்னையில் இன்று இரவு முதல் மழை! மற்ற மாவட்டங்களில் மழை எப்படி இருக்கும்?புயல் எச்சரிக்கை: குடியரசுத் தலைவர் முர்முவின் ஒடிசா பயணம் ஒத்திவைப்பு கோயில்களில் பணம் கேட்டால் ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம்! அமைச்சர் ரமேஷ்மாயமான சிறுவர்களை மீட்டு, அனைத்து கோணங்களிலும் அரசு விசாரிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி ரெட் அலர்ட்: நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மூடல்! தேசிய பேரிடர் மீட்புப் படை விரைவு!அமைதிப் பத்திரத்தில் கையெழுத்திட மாட்டேன்! நேஹா போரா

சென்னையில் நுண்ணுயிர் சிறுதொழில் பயிற்சி மையம்: மத்திய அமைச்சர் தகவல்

சென்னையில் நுண்ணுயிர் சிறுதொழில் பயிற்சி மையம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய அமைச்சர் கல்ராஜ்மிஸ்ரா தெரிவித்தார்.

Updated On :

சென்னையில் நுண்ணுயிர் சிறுதொழில் பயிற்சி மையம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய அமைச்சர் கல்ராஜ்மிஸ்ரா தெரிவித்தார்.
 ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு, மத்திய சிறுகுறு தொழில்துறை அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா தனது குடும்பத்தினருடன் திங்கள்கிழமை வந்திருந்தார். அக்னி தீர்த்தக்கடல், புனித தீர்த்தங்களில் நீராடிய பின்னர், திருக்கோயிலில் சுவாமி, அம்மன் சன்னதியில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டு தரிசனம் செய்தார்.
 பின்னர், முகுந்தராயர் சத்திரம் முதல் தனுஷ்கோடி வரை மத்திய அரசு சார்பில் நடைபெற்று வரும் சாலை அமைக்கும் பணிகளையும் பார்வையிட்டார்.
 அதன் பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் தெரிவித்ததாவது: தமிழகத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் சென்னையில் நுண்ணுயிர் சிறு தொழில் பயிற்சி மையம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. புதுவையில் முதலீட்டாளர் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
 தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்களின் கிராமங்களில் கயிறு திரித்தல் தொழிலை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
 தனுஷ்கோடி முதல் இலங்கை தலைமன்னார் வரை கடல்வழிப் பாலம் அமைக்கும் பணிகள் தொடங்குவதற்கு மத்திய அமைச்சர் நிதின்கட்கரி நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இதை தீவிரப்படுத்த வலியுறுத்துபோவதாகவும் அவர் தெரிவித்தார்.
 பேட்டியின்போது தேசியக்குழு உறுப்பினர் முரளீதரன் மற்றும் நகர் நிர்வாகிகள் முத்துச்செல்வம், நாகேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.