ஆரணி அருகே பாகிஸ்தான் உளவாளி கைது சன்ன ரகப் பொன்னி அரிசியைக் கொள்முதல் செய்வதற்கு அரசு எப்போது டெண்டர் விட்டது? உதயநிதி ஸ்டாலின் கேள்வி ஜம்முவில் எல்லை அருகே ட்ரோன் மீட்பு: காவல் துறையினர் தீவிர விசாரணை சென்னையில் இன்று இரவு முதல் மழை! மற்ற மாவட்டங்களில் மழை எப்படி இருக்கும்?புயல் எச்சரிக்கை: குடியரசுத் தலைவர் முர்முவின் ஒடிசா பயணம் ஒத்திவைப்பு கோயில்களில் பணம் கேட்டால் ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம்! அமைச்சர் ரமேஷ்மாயமான சிறுவர்களை மீட்டு, அனைத்து கோணங்களிலும் அரசு விசாரிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி ரெட் அலர்ட்: நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மூடல்! தேசிய பேரிடர் மீட்புப் படை விரைவு!அமைதிப் பத்திரத்தில் கையெழுத்திட மாட்டேன்! நேஹா போரா

தமிழர்கள் ஹிந்தி, சம்ஸ்கிருதம் கற்க தடை ஏற்படுத்தக் கூடாது: பொன். ராதாகிருஷ்ணன்

சம்ஸ்கிருதம் உள்பட பல்வேறு மொழிகளைத் தமிழர்கள் கற்பதன் மூலம் தமிழ் இலக்கியப் படைப்புகளை உலகறியச் செய்யலாம் என, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Updated On :

சம்ஸ்கிருதம் உள்பட பல்வேறு மொழிகளைத் தமிழர்கள் கற்பதன் மூலம் தமிழ் இலக்கியப் படைப்புகளை உலகறியச் செய்யலாம் என, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

சென்னை மீனாட்சி கல்லூரியில் சம்ஸ்கிருத சம்மேளனம் சார்பில் சாமானியர்களுக்கும் சம்ஸ்கிருதம் என்ற தலைப்பிலான கருத்தரங்கு வெள்ளிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற்றது. இதில் சம்ஸ்கிருத மொழி குறித்து சிறப்பு சொற்பொழிவு, கண்காட்சி, கலாசார நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

ஞாயிற்றுக்கிழமை நடந்த நிறைவு நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், விவேகானந்தா கல்விக் கழகத்தின் நிறுவன நிர்வாகி டி.சக்கரவர்த்தி, முன்னாள் இந்திய ரயில்வே வாரிய நிதி உறுப்பினர் எஸ்.ராம் மோகன், சம்ஸ்கிருத பாரதி பொதுச் செயலாளர் பி.நந்தகுமார், வட தமிழக சம்ஸ்கிருத பாரதி தலைவர் ஆர்.என்.ஜோ டி குரூஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியது: மொழியானது உணர்வுகளின் வெளிப்பாடாக இருந்து வருகிறது. இதில், தமிழ் மொழி மிகவும் தொன்மையான மொழியாக உள்ளது. பெருமைக்குரிய தமிழ்மொழியை பேசுவதற்கு தயக்கம் காண்பிக்கக் கூடாது. கடந்த 50 ஆண்டுகளில் தமிழைத் தவிர வேறு மொழிகளைக் கற்பதற்கு அரசியல்வாதிகள் தடையாக இருந்து வருகின்றனர்.

தமிழகத்தைத் தவிர வேறு மாநிலம், வெளிநாடுகளுக்குச் செல்லும்போது மொழியால் விஷயங்களைப் பகிர முடியாமல் திணறுகிறோம்.

இதனாலேயே தமிழனின் பெருமையை உலகறியச் செய்ய முடியாமல் பின்னடைவு ஏற்படுகிறது.

இந்த நிலை மாறுவதற்கு, ஹிந்தி, சம்ஸ்கிருதம் உள்ளிட்ட பல்வேறு தேசிய மொழிகளைக் கற்க வேண்டும். இதற்காக எந்த தடையையும் ஏற்படுத்தக் கூடாது. அதேவேளையில் குறிப்பிட்ட மொழியைக் கற்குமாறு மாணவர்களிடம் திணிக்கக் கூடாது. அவர்கள் விரும்பியபடி மொழிகளைக் கற்பதற்கு அனுமதிக்க வேண்டும்.

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழும், சம்ஸ்கிருதமும் ஞான மொழியாகவும், தெய்வ சிந்தனையைத் தூண்டும் மொழியாகவும் விளங்கி வருகின்றன.

எந்தச் சூழ்நிலையிலும், மொழி பகிர்வில் பாகுபாடு இருக்கக் கூடாது. ஆகவே, தமிழ்மொழி, சம்ஸ்கிருதம் உள்ளிட்ட உலக மொழிகளையும் சேர்த்துக் கற்கும்போது ஞானம், கருத்துப் பரிமாற்றத்துடன்கூடிய நல்ல சிந்தனை வளரும்.

இதன்மூலம், தமிழ் மொழியின் இலக்கியப் படைப்புகள், கலாசாரம், பண்பாடு ஆகியவை உலகறியச் செய்ய முடியும். எதிர்காலத்தில் இளையதலைமுறையினரை மேம்படுத்தும் ஆயுதமாக மொழிகள் விளங்கும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.