இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட மண்டபம் மீனவர்கள் 4 பேரை விடுவித்து, இலங்கை ஊர்க் காவல் துறை நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
மண்டபம் பகுதியில் இருந்து ஆகஸ்ட்
31-ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மைக்கேல், சூசைராஜ், நெப்போலியன், கெவியோன் ஆகிய 4 மீனவர்களை, இலங்கைக் கடற்படையினர் நடுக்கடலில் கைது செய்து இலங்கை ஊர்க் காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 4 மீனவர்களும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேயின் இந்திய வருகையை முன்னிட்டு, இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்க, நீதிமன்றத்துக்கு அந்த நாட்டு அரசு பரிந்துரைத்தது.
அதனடிப்படையில் திங்கள்கிழமை ஊர்க் காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மண்டபம் பகுதி மீனவர்கள் 4 பேரையும் விடுவித்து நீதிபதி உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

