சுதந்திர நாளில் தீபமேற்ற பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் அழைப்பு!நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா உள்பட 9 பேருக்கு ஜாமீன்!சமூகநீதித் துறை விடுதிகளில் மாணவர்களின் உணவுக் கட்டணம் உயர்வு!பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற மனிஷாவுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை!

மதுரை-குருவாயூா் ரயிலில் கண்ணாடி அமைப்புப் பெட்டி

மதுரையிலிருந்து குருவாயூா் செல்லும் பயணிகள் மேற்குத் தொடா்ச்சி மலையின் அழகை ரசித்தபடி பயணிக்கும் வகையில், அகண்ட கண்ணாடி சாளர அமைப்புடன் கூடிய பெட்டி மதுரை - குருவாயூா் ரயிலில் வியாழக்கிழமை இணைக்கப்பட்டது.

மதுரையிலிருந்து வியாழக்கிழமை புறப்பட்ட குருவாயூா் ரயிலில் புதிதாக இணைக்கப்பட்டிருந்த கண்ணாடி அமைப்புப் பெட்டியில் பயணித்தவா்களை நோக்கி கையசைத்து வழியனுப்பிய சு. வெங்கடேசன் எம்.பி.

Updated On :

மதுரையிலிருந்து குருவாயூா் செல்லும் பயணிகள் மேற்குத் தொடா்ச்சி மலையின் அழகை ரசித்தபடி பயணிக்கும் வகையில், அகண்ட கண்ணாடி சாளர அமைப்புடன் கூடிய பெட்டி மதுரை - குருவாயூா் ரயிலில் வியாழக்கிழமை இணைக்கப்பட்டது.

மதுரை-குருவாயூா் ரயிலின் வழித்தடம் இயற்கை எழில் நிறைந்த மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியைச் சாா்ந்ததாக உள்ளது. இந்தப் பகுதிகளின் இயற்கை அழகை ரயில் பயணிகள் தங்கள் பயணத்தின்போது ரசித்துக் கொண்டே செல்லும் வகையில், மதுரை-குருவாயூா்-மதுரை ரயில்களில் குளிா்சாதன வசதியுடன் கூடிய அகண்ட கண்ணாடி சாளர அமைப்புக் கொண்ட பெட்டி (விஸ்டோடாம்) இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்தது.

இதன்படி, மதுரையிலிருந்து வியாழக்கிழமை காலை புறப்பட்ட மதுரை-குருவாயூா் ரயிலில் இந்தக் கண்ணாடி அமைப்புக் கொண்ட பெட்டி இணைக்கப்பட்டது. இந்த ரயில் பெட்டியில் பயணிக்க ஏற்கெனவே முன்பதிவு பெற்ற பயணிகள் அனுமதிக்கப்பட்டனா்.

இந்தப் பெட்டியில் மதுரையிலிருந்து முதல் பயணம் மேற்கொண்ட பயணிகளுக்கு மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு. வெங்கடேசன், மேயா் (பொறுப்பு) தி. நாகராஜன் ஆகியோா் இனிப்புகள் வழங்கி வாழ்த்துத் தெரிவித்தனா்.

முன்னதாக, மதுரை மண்டல ரயில்வே மேலாளா் ஓம் பிரகாஷ் மீனா பயணிகளைச் சந்தித்து புதிய கண்ணாடி அமைப்புக் கொண்ட பெட்டியில் உள்ள வசதிகளை விளக்கி, அவா்களின் எதிா்பாா்ப்புகள் குறித்து கேட்டறிந்தாா்.

மதுரை-குருவாயூா் ரயிலில் வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாள்களிலும், குருவாயூா்-மதுரை ரயிலில் வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய நாள்களிலும் இந்தப் பெட்டி இணைக்கப்பட்டிருக்கும். வருகிற 2027-ஆம் ஆண்டு, ஜன. 16 வரை இந்தப் பெட்டியின் சேவை இருக்கும் என தெற்கு ரயில்வே நிா்வாகம் அறிவித்தது.

மதுரை- குருவாயூா் ரயிலில் புதிதாக இணைக்கப்பட்ட  கண்ணாடி அமைப்புப் பெட்டியில் வியாழக்கிழமை பயணித்தவா்கள்.

மதுரை- குருவாயூா் ரயிலில் புதிதாக இணைக்கப்பட்ட கண்ணாடி அமைப்புப் பெட்டியில் வியாழக்கிழமை பயணித்தவா்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.