கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே லாரி மீது கார் மோதியதில் சென்னையைச் சேர்ந்த தம்பதி உயிரிழந்தனர், மேலும், படுகாயமடைந்த இருவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையை அடுத்த தாம்பரத்தைச் சேர்ந்தவர் ராஜகோபால் (85). இவரது மனைவி சியாமளா (73). இத் தம்பதியின் வளர்ப்பு மகன் மோகன்ராஜ் (28). தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி அன்புஜோதி (23). சியாமளாவுக்கு பார்வைக் குறைபாடு இருந்தது. இதையடுத்து, பெங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை நடைபெற இருந்தது. இதற்காக, சனிக்கிழமை சென்னையில் இருந்து காரில் 4 பேரும் புறப்பட்டனர். காரை மோகன்ராஜ் ஓட்டி வந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி மேலுமலை அருகே சனிக்கிழமை நள்ளிரவில் கார் வந்தபோது, முன்புறம் சென்ற டிப்பர் லாரியின் பின்புறம் எதிர்பாராத விதமாக மோதியது. இதில், ராஜகோபால், இவரது மனைவி சியாமளா ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
இதில், மோகன்ராஜ், அன்புஜோதி ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த சூளகிரி போலீஸார் நிகழ்விடத்துக்குச் சென்று படுகாயமடைந்த இருவரையும் மீட்டு, ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர், இருவரும் தீவிர சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விபத்தில் உயிரிழந்த தம்பதி உடலை மீட்ட போலீஸார், பிரேத பரிசோதனைக்காக ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இதுகுறித்து சூளகிரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


