விருதுநகரில் தனிநபர் கழிப்பறை வளாகம் அமைப்பது தொடர்பாக பொதுமக்கள் பிரதிநிதிகளுக்கான விழிப்புணர்வு கூட்டம் இன்று நடைபெற்றது.
விருதுநகர் ஊராட்சி ஒன்றிய வளாக கூட்டரங்கத்தில் நடந்த கூட்டத்திற்கு ஆணையாளர் தனசேகர் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) மல்லிகா மற்றும் ஒன்றியக்குழு துணைத்தலைவர் மூக்கையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், ஒன்றியக் குழுதலைவர் கி.கலாநிதி கலந்து கொண்டு பேசுகையில், ஒவ்வொரு ஊராட்சிகளையும் சுகாதார கிராமங்களாக மாற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் அடிப்படையில் கிராமங்களில் உள்ள ஒவ்வொரு குடியிருப்புகளிலும் தனிநபர் கழிப்பறை வளாகம் அமைக்க தலா ரூ.12500 முழு மானியமும் அளிக்கப்படுகிறது.
இது குறித்து பொதுமக்கள் பிரதிநிதிகள் தங்கள் கிராமங்களில் ஒவ்வொரு வீடு வீடாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இத்தொகையை அனைவரும் பெற்று தனிநபர் கழிப்பறைகள் அமைத்து, கிராமங்களில் திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
இக்கூட்டத்தில் விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த அனைத்து ஊராட்சி தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், வட்டார ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி செயலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நினைவு நாள்: காஷ்மீரில் சுற்றுலா தலங்களில் பலத்த பாதுகாப்பு!

சட்டப்பேரவை தோ்தல்: வேலூா் மண்டலத்தில் 80 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றியது திமுக அரசு: கும்மிடிப்பூண்டி திமுக வேட்பாளா்
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

