
இலங்கை மீது சர்வதேச விசாரணை:அனைத்துக் கட்சி குழு பிரதமரை சந்திக்க அன்புமணி வலியுறுத்தல்
இலங்கை மீது சர்வதேச விசாரணை நடத்த வலியுறுத்தி, தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சிகளின் குழுவினர் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் பிரதமரை சந்தித்துப் பேச வேண்டுமென, பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார்.

இலங்கை மீது சர்வதேச விசாரணை நடத்த வலியுறுத்தி, தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சிகளின் குழுவினர் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் பிரதமரை சந்தித்துப் பேச வேண்டுமென, பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார்.
ஜெனீவாவில் நடைபெற்று வரும் மனித உரிமை மாநாட்டில் பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் அன்புமணி ராமதாஸ் வரும் 30-ஆம் தேதி பங்கேற்றுப் பேசுகிறார். இதையொட்டி, சென்னையில் செய்தியாளர்களுக்கு சனிக்கிழமை அவர் அளித்த பேட்டி:
இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல் தொடர்பான அமெரிக்காவின் தீர்மானம் போர் குற்றங்களுக்கு ஆதரவாக அமைந்துள்ளது. அதில், காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த நீதிபதிகளைக் கொண்டு விசாரணை நடத்த வேண்டுமென கூறப்பட்டுள்ளது.
இதை இந்தியா ஆதரிக்கக் கூடாது. இந்தப் பிரச்னையில் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மௌனமாக இருப்பது வியப்பாக உள்ளது. இலங்கையில் நடந்த போர்க் குற்றம் தொடர்பாக, சர்வதேச விசாரணை நடத்த வேண்டும். அதற்கு இந்தியா உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும்.
அனைத்துக் கட்சி குழுவினர்:
இந்தியா உரிய அழுத்தத்தைக் கொடுக்க, முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அனைத்துக் கட்சி குழுவினர் பிரதமரைச் சந்திக்க வேண்டும். இப்போது அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரித்தால் அது தமிழர்களுக்குச் செய்யும் துரோகமாக அமையும்.
மது வேண்டாம் என்பதில் தமிழக மக்கள் உறுதியாக உள்ளனர். மது ஒழிப்பு என்பது மாபெரும் மக்கள் இயக்கமாக உருவெடுத்து வருகிறது. மது ஒழிப்பு பற்றி மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தத் தயாரா என்றார் அன்புமணி ராமதாஸ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





