பௌர்ணமி கிரிவலம்: அக்.25, 26-ல் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்! அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்: முதல்வர் விஜய் ஸ்லீப் மோடில் இருந்து வெளியே வருவாரா? - உதயநிதி ஸ்டாலின் கேள்வி பிசிசிஐ இளையோர் தேர்வுக்குழு தலைவராக பர்விந்தர் அவானா நியமனம்! ஹௌதி தாக்குதல்! சௌதி உடனான இண்டிகோ விமான சேவைகளின் ரத்து நீட்டிப்பு! சென்னை விமான நிலையத்தில் வீரமணியின் மகள் தடுத்து நிறுத்தம்!

எட்டயபுரத்தில் பாரதி விழா தொடங்கியது

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் கிளை அமைப்பான பாரதி முற்போக்கு வாலிபர் சங்கம் சார்பில் 54-ஆம் ஆண்டு மகாகவி பாரதி விழா சனிக்கிழமை தொடங்கியது.

Updated On :

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் கிளை அமைப்பான பாரதி முற்போக்கு வாலிபர் சங்கம் சார்பில் 54-ஆம் ஆண்டு மகாகவி பாரதி விழா சனிக்கிழமை தொடங்கியது.

விழாவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் டி.ராஜா, முன்னாள் எம்.பி. அப்பாத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் டி.ராஜா பேசியதாவது: புதிய இந்தியாவை நோக்கி பயணித்த மகாகவி பாரதி என்றும் நிரந்தரமானவர்.

பாரதி கண்ட புரட்சிகரமான கனவுகளை நனவாக்க ஒவ்வொரு இந்தியரும் இந்த சமுதாய நலனுக்காகவும், நாட்டின் சமூக நீதிக்காகவும் முனைப்புடன் செயல்பட வேண்டும். புதிய சிந்தனையைத் தன் வாழ்நாள் முழுவதும் வலியுறுத்தி வந்த பாரதி பன்முகத்தன்மை வாய்ந்த பெரும் போராளி என்றார் அவர்.

இதையொட்டி நடைபெற்ற படத்திறப்பு நிகழ்ச்சியில், மறைந்த விடுதலைப் போராட்ட வீரர் ஐ.மாயாண்டி பாரதியின் உருவப் படத்தை, பாரதி ஆய்வாளர் இளசை மணியன் திறந்து வைத்தார்.

இன்று... ஞாயிற்றுக்கிழமை (செப். 27) நடைபெறும் நிறைவு விழாவில் காலை 10 மணிக்கு மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தனின் கலை இலக்கிய ஆளுமை என்ற தலைப்பில் நடைபெறும் கருத்தரங்க நிகழ்ச்சிக்கு பேராசிரியர் எஸ்.தோதாத்ரி தலைமை வகிக்கிறார்.

மாலை 5 மணிக்கு பள்ளி, கல்லூரி மாணவர், மாணவிகள் பங்கேற்கும் யோகா உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள், கவிதாஞ்சலி ஆகியன நடைபெறும். இரவு 8.30 மணிக்கு "பாரதியின் பாடல்களில் விஞ்சி இருப்பது மண் உரிமையே, மனித உரிமையே' என்ற தலைப்பில் கு.ஞானசம்பந்தன் நடுவராகப் பங்கேற்கும் பட்டிமன்றம் நடைபெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.