சென்னை விமான நிலையத்தில் வீரமணியின் மகள் தடுத்து நிறுத்தம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் சரிந்து ரூ. 94.93ஆக நிறைவு!தொடரும் சரிவு! 4வது நாளாக வீழ்ச்சியுடன் முடிந்த சென்செக்ஸ், நிஃப்டி!!தமிழக பாட்மின்டன் வீராங்கனை துளசிமதிக்கு இரட்டை வெள்ளி!

வரும் ஆண்டில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும்; இல்லாவிட்டால் போராட்டம் வெடிக்கும்: ஸ்டாலின்

ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி திமுக சார்பில் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

Updated On :

ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி திமுக சார்பில் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

 நமக்கு நாமே சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக, அலங்காநல்லூருக்கு வெள்ளிக்கிழமை வந்த அவர் வாடிவாசல் பகுதியில் திரண்டிருந்த பொதுமக்களிடையே பேசியதாவது:

 தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்பு  ஜல்லிக்கட்டுக்கு தடை வந்த போதெல்லாம் திமுக அரசு அதற்கு உரிய அனுமதியைப் பெற்று நடத்தியது. உச்சநீதிமன்றம் அமைத்த ஆய்வுக் குழு பாலமேடு, அவனியாபுரம், அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டியைப் பார்வையிட்டு சில பரிந்துரைகளை அளித்தது. நீதிமன்ற உத்தரவின்படி இப்போதைய அரசு, பரிந்துரைகளை அமல்படுத்தவில்லை. இதன் காரணமாகவே தடைபட்டு விட்டது.  வரும் பொங்கல் பண்டிகைக்கு ஜல்லிக்கட்டு நடத்த உரிய அனுமதியை அரசு பெற வேண்டும். இல்லையெனில் எனது தலைமையில் மதுரையில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.