விருதுநகர் அருகே துள்ளுமாரியம்மன் திருக்கோயில் புரட்டாசி திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு ரூ.2.50 லட்சத்தில் ரூபாய் நோட்டுக்களில் சிறப்பு அலங்காரம் செய்திருந்தனர்.
விருதுநகர் அருகே ரோசல்பட்டி ஊராட்சி அலுவலகம் எதிரே உள்ளது துள்ளுமாரியம்மன் திருக்கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி பொங்கல் திருவிழா ஒரு வாரம் வரையில் சிறப்பாக நடைபெறும். தற்போது, இத்திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி, தொடர்ந்து ஒரு வாரம் நடைபெற இருக்கிறது. இத்திருவிழாவில் ஒவ்வொரு நாளும் பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்துவோர் அளிக்கும் நன்கொடை மூலம் காய்கறி அலங்காரம், இளநீர் மற்றும் பழ வகைகள் அலங்காரம், பல்வேறு வகையான பூக்கள் அலங்காரம், சந்தனக்காப்பு அலங்காரம், குங்கும பொன் நகை அலங்காரம் உள்ளிட்ட பல்வேறு வகை அலங்காரங்களுடன் பக்தர்களுக்கு துள்ளுமாரியம்மன் தரிசனம் அளிப்பார்.
அந்த வகையில் சனிக்கிழமை ரூ.2.50 லட்சத்தில் ரூபாய் நோட்டுக்கள் மாலை அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இவ்விழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜை செய்து பொங்கல் படையல் பிரசாதமும் பக்தர்களுக்கு வழங்கப்படும். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை இத்திருக்கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நினைவு நாள்: காஷ்மீரில் சுற்றுலா தலங்களில் பலத்த பாதுகாப்பு!

சட்டப்பேரவை தோ்தல்: வேலூா் மண்டலத்தில் 80 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றியது திமுக அரசு: கும்மிடிப்பூண்டி திமுக வேட்பாளா்
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


