அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

விருதுநகர் மாவட்ட அளவிலான காவலர் குடும்பங்களுக்கான மருத்துவ முகாம்

விருதுநகர் மாவட்ட அளவில் காவல் துறையினர்  குடும்பங்களுக்கான இலவச மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது.

Updated On :26 செப்டம்பர் 2015, 2:33 pm

விருதுநகர் மாவட்ட அளவில் காவல் துறையினர்  குடும்பங்களுக்கான இலவச மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட காவல் துறையும், அப்பல்லோ மருத்துவமனையும் இணைந்து 40 வயதிற்கு மேற்பட்ட காவலர்கள் மற்றும் அவர்கள் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு இலவச மருத்துவமுகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கத்தில் நடந்தது.

இம்முகாமிற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். இதில், உதவி காவல் கண்காணிப்பாளர் அருண்பாலகோபாலன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மாடசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். இதில், காவல் துறையினர் குடும்பங்களைச் சேர்நத இருபாலருக்கும் சர்க்கரை நோய் கண்டறிதல், ரத்தவகை கண்டறிதல், இ.ஜி.ஜி., மூட்டுவலி, கண் சிகிச்சை, ஸ்கேன், பல் சம்பந்தமான நோய்களுக்கு அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவக்குழுவினர் ஆலோசனை மற்றும் சிகிச்சை அளித்து மருந்து மாத்திரைகளும் அளித்தனர்.

இம்மருத்துவ முகாமில் சூலக்கரை ஆயுதப்படை மைதான குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த காவலர் குடும்பங்களைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  இதேபோல், அக்.3,10,17 ஆகிய நாள்களிலும் இலவச மருத்துவ முகாம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடத்தப்பட இருப்பதாகவும், காவல் துறை குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு பயனடையலாம். இதற்கான ஏற்பாடுகளை காவல் துறை அதிகாரிகள் மற்றும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்தினர் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.