விருதுநகர் அருகே ஓடிக்கொண்டிருந்த காரில் திடீரென இயந்திர பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதால் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இதில் பயணம் செய்த மாத இதழ் பதிப்பாசிரியர் உள்பட 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
கோவை வடவள்ளியைச் சேர்ந்தவர் டேவிட் கிங்ஸ்லி(60). இவர் வான் அமுதம் என்ற மாத இதழின் பதிப்பாசிரியராக இருந்து வருகிறார். இவர் உள்பட 5 பேர் சனிக்கிழமை கோவையிலிருந்து சிவகாசிக்கு சென்றனர். அங்கு சர்ச் வேலையை முடித்துக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் சிவகாசியிலிருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்தனர். காரை கோவையைச் சேர்ந்த அகஸ்டின்(45) ஓட்டினாராம். அப்போது, சிவகாசி-விருதுநகர் சாலையில் அருகே குமாரலிங்காபுரம் செல்லும் போது காரில் முன்புறம் இயந்திர பாகத்திலிருந்து புகை கிளம்பியுள்ளது.
இதையடுத்து உடனே ஆபத்தை உணர்ந்த ஓட்டுநர் உள்பட 5 பேரும் கீழே இறங்கி தப்பினர். அதையடுத்து சிறிது நேரத்தில் காரில் தீ மளமள பரவி முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விருதுநகரில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இந்த விபத்தில் கார் முற்றிலும் எரிந்து நாசமானது.
இது தொடர்பாக ஆமத்தூர் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நினைவு நாள்: காஷ்மீரில் சுற்றுலா தலங்களில் பலத்த பாதுகாப்பு!

சட்டப்பேரவை தோ்தல்: வேலூா் மண்டலத்தில் 80 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றியது திமுக அரசு: கும்மிடிப்பூண்டி திமுக வேட்பாளா்
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


