மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்குதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலிறுத்தி திங்கள்கிழமை ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மு.தியாகராஜன் தலைமை வகித்தார். சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் மோகனவல்லித்தாயார் முன்னிலை வகித்தார். மாநில பொருளாளர் ஆர்.சுசிலா மேரி சிறப்புரை வழங்கினார்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஜலாலுதின், மாவட்ட செயலாளர் ராமசுப்புராஜ் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
இதில், ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். அரசு உத்தரவுக்கு மாறாக சமையல் உதவியாளர்களிடம் தணிக்கைத் தடை என்ற பெயரில் பணபிடித்தம் செய்வதை கைவிட வேண்டும் என்பது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நிறைவாக மாநில பொதுச்செயலாளர் இ.மாயமலை நிறைவுரை வழங்கினார். மாவட்ட பொருளாளர் விஜயா நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நினைவு நாள்: காஷ்மீரில் சுற்றுலா தலங்களில் பலத்த பாதுகாப்பு!

சட்டப்பேரவை தோ்தல்: வேலூா் மண்டலத்தில் 80 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றியது திமுக அரசு: கும்மிடிப்பூண்டி திமுக வேட்பாளா்
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

