நெல்லை: உதவித் தொகையை முறையாக வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் முற்றுகைப் போராட்டம்
மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகையினை முறையாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமைமாற்றுத்திறனாளிகள் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.


திருநெல்வேலி: மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகையினை முறையாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை
மாற்றுத்திறனாளிகள் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
அரசாணைப்படி 40 சதவீதம் ஊனமுள்ள அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் நிபந்தனைகள் இன்றி பராமரிப்பு உதவித் தொகை ரூ. 1000 வழங்க வேண்டும். கண் பார்வை இல்லாதோர், மனநலம் குன்றியோர், வாய்பேச இயலாதோர் உள்ளிட்ட கடும் ஊனமுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திரப் பராமரிப்பு உதவித் தொகை ரூ. 1500 வழங்க வேண்டும்.
மாற்றுத் திறனாளிகளுக்கு அம்பாசமுத்திரம், தென்காசி, சங்கரன்கோவில், வள்ளியூர், சேரன்மகாதேவி ஆகிய அரசு மருத்துவமனைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும்.
மாற்றுத் திறனாளிகளுக்கான திருமண உதவித் தொகையினை உடனுக்குடன் வழங்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ள அடையாள அட்டை வழங்க வேண்டும்.
வீடு இல்லாத மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக மனைப்பட்டா, அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளுக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகள் சங்கம் சார்பில் திருநெல்வேலியில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலி கொக்கிரகுளம் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் முன்பு நடைபெற்ற இப்போராட்டத்துக்கு அமைப்பின் மாவட்டத் தலைவர் பி. தியாகராஜன் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலர் எஸ். நம்புராஜன், டாக்டர் எஸ். குமரகுரு, மாவட்டச் செயலர் எஸ். குமாரசாமி, அகஸ்தியராஜன், சுடலைராஜ் உள்பட 100 க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் தனித்தனியே மனு அளித்தனர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...