முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு: தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதி!
முதல்வர் ஜெயலலிதாவுக்கு இன்று மாலை 4 மணி அளவில் மாரடைப்பு ஏற்பட்டதாக அப்போல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சென்னை: முதல்வர் ஜெயலலிதாவுக்கு இன்று மாலை 4 மணி அளவில் மாரடைப்பு ஏற்பட்டதாக அப்போல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைபாடு காரணமாக கடந்த செப்டம்பர் - 22 ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.பல்வேறு கட்ட தொடர் சிகிச்சைகளுக்கு பிறகு அவரது உடல் நலம் தேறி விட்டதாக முன்னாள் அமைச்சர் பொன்னையன் இன்று காலை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று மாலை 4 மணி அளவில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு 'திடீர்' உடல்நலக் குறைபாடு ஏற்பட்டதாக முதலில் தகவல்க ள் வெளியாகின.
இதனைத் தொடர்ந்து தற்போது அப்போல்லோ மருத்துமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
முதல்வர் ஜெயலலதாவுக்கு இன்று மாலை 4 மணி அளவில் மாரடைப்பு ஏற்ப்பட்டது., அதனைத் தொடர்ந்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தற்போது இதயவியல் மற்றும் சுவாசவியல் மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...